பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

போச்சுது:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட உணவு அற்றுப் போயது என்பதை வெளிப்படுத்தும் அரிய ஆட்சி அது. ஆனால் ஆயிற்று ஆச்சுது ஆனது போலப் போயிற்று என்பது போச்சுது எனக் காச்சை வடிவுற்றது. உறுதியாயிற்று என்பது உறுதியாயிற்று என்பது ‘உறுதி யாச்சு என ஏட்டுவழக்கு ஆயதை இவண் எண்ணலாம். அற்றது’ என்னும் வள்ளுவ வழக்கை எண்ணலாம்.

போச்சை:

புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக் குள்ளும் புக வல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில் வழங்கு கின்றது. போச்சை=போதலுடையது.

போஞ்சி:

நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு -பேஞ்சி போஞ்சி ஆகியிருக்கலாம். (மழை) பொழிந்தது, பெய்தது,

பேஞ்சது என்றவாறு வழங்குவது நினையத்தக்கது.

போட்டி:

குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும் தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாயது (சங்கு) போலப் போட்டும் உணவு போய்ச் சேரும் இடம் போட்டி என வழங்கப் பட்டது.

போடு:

திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையதாதலால் இப் பெயர் பெற்றது.

போத்தி:

போற்றி (போற்றத்தக்கவர்) என்னும் அருமைப் பெயர் போத்தி என மக்கள் வழக்கில் ஊன்றியுள்ளது. தாத்தா என்னும் முறைப்பெயரே போத்தி என்பதாம். இது நெல்லை வழக்கு.