பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

23

எதிரிடையானவராக இருவர் இருந்தாலும் அவ்விருவர்க்கும் தகத்தகப் பேசியும் செய்தும் இருபக்கமும் நன்மைபெறுபவர் இருதலை மணியன்' எனப்பழிக்கப்படுவர். அவர் ஒரு நிலைப் படாதவர் என்பது குறிப்பாம்.

இருநூறு இருநூறாண்டு வாழ்க

ஒருவர் தும்முங்கால் நூறு என்று வாழ்த்துவர். 'நூறாண்டு வாழ்க' என்பதன் சுருக்கம் நூறு என்பதாம். 'தும்மல்' கேடு என்னும் கருத்தால், அந்நிலையின்றி நலம் பெறுக என்னும் வாழ்த்தாக மாற்றிக் கூறுவது வழக்காயிற்று. அத்தும்மல் மீளவும் உட னே வருங்கால் இருநூறு' என்பர். இரு நூறாண்டுகள் வாழ்க என்பது அவ்வாழ்த்தின் உட்கிடையாம். இருநூறு என்னும் எண்ணுப்பெயர் வாழ்த்தாக அமைதல் வழக்காதலின் இங்கு எண்ணத் தக்கதாம். தும்முதல் பிறர் நினைப்பதன் குறி என்னும் எண்ணம் பண்டேயுண்டு என்பதற்குத் திருக்குறளில் வரும் ஊடற் குறிப்புகள் சான்றாம்.

இரும்புக்கடலை - கடினம்

லை

கடலை ல விரும்பியுண்ணும் உண்டியாம் நிலக்கட லை, (மணிலாக் கொட்டை) என்பது. கொண்டைக்க லை வடிவிலே செய்யப்பட்டது இரும்புக் கடலை. அதனை வாயிலிட்டு மென் றால் பல் என்னாம்? பல்லை உடைக்கும் இரும்புக் கட செய்வார் இல்லை. அப்படி ஒருவர் செய்து தின்னச் சொன் னால் எப்படி இருக்கும்? இனியதும் எளியதும் பொருள் நயம் மிக்கதுமாம் பாடல்கள் பாடுவதை விடுத்து பொருட்பயன் இல்லாமல் கடுமையாக அமைந்த பாக்களை இயற்றுவது இரும்புக் கடலை' செய்து விற்பது போன்றதாம். பயனற்ற செயல் மட்டுமன்றி மொழியைப் பாழாக்கும் செயலுமாம் என்பதைச் சொல்வது இரும்புக் கடலை.

இலஞ்சியம் - அருமை, அழகு

உள

இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்ந்தது இலஞ்சி. ஆகலின் தேவர்களால் அமைக்கப் பட்டது எனப்புனைந்து கூறும் தொன்மக்கதைகள் வாயின. இலஞ்சியின் அழகும் அருமையும் இலஞ்சியம் என்னும் சொல்லை உண்டாக்கி அதற்கு அப்பொருள்களையுண்டாக்கின. லஞ்சியமாக ஒரே ஒரு பிள்ளை; ‘நீ ஒருவன் தான் இலஞ்சிய