பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

மண்டாரம்:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

வீட்டு மாடிகளில் உள்ள வெளியை மண்டாரம் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மண்டை என்பது தலை என்றும் பெரிய என்றும் பொருள் தரும் முதனிலைச் சொல். பெரும் பானையை 'n மண்டை என்பதும் உண்டு. மண்டைத்தாலி பெருந்தாலி. உயர்ந்த பெருவெளி மண்டாரம் எனப்பட்டுள்ளது. மண்டைக் கறி:

க்

மதுரை, இழுவை வண்டியோட்டியர் மண்டைக் கறி என ஒன்றை வழங்குகின்றனர். அதற்குப் பெயர் சுஞ்சா. அதனைப் பயன்படுத்துவார் பற்றுமை விளக்கும் செய்தி இது.

ப மணற்காடை:

தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். மணற்காடை

இங்கே என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல் வாழ்வுடைமையால் இப் பெயர் சூட்டினர் போலும். மணிக் கூடு:

ப்

காலம் பழங்காலத்தில் கணிக்கப்பட்டது. அதனைச் செய்தவர் காலக் கணியர் எனப்பட்டனர். காலத்துள் ஒன்று கடிகை. அதனைச் சார்ந்தே கடிகையாரம் (கடிகாரம்) எனப் புதுச் சொல்லாட்சி பெற்றது. காலங்காட்டி என்பதும் அது. கடிகாரத்தை மணிக்கூடு என்பது யாழ்ப்பாண வழக்கு. மணிக் கூண்டு எனக் காலம் காட்டும் கோபுரங்கள் தமிழகத்தில் பல ஊர்களில் உண்டு.

மத்தை:

மத்து என்பது திரண்டு உருண் து. தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை கருவியையும் ஊமத்தைக் காயையும் ஒப்புமை காணலாம்.

மதகு:

ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கியை மதகு என்பது பொது வழகுக்கு. அம் மதகு அமைப்பில் நீர் செல்லுமாறு அமைக்கப்பட்ட மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. மதகுபட்டி என ஊர்ப் பெயர் முகவை மாவட்டத்துள்ளது.