பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தணம்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

க்

385

பிறர்க்குச் சொல்லாமல் உள்ளடக்கமாக வைக்கத் தக்கதை மந்தணமாக என்பது இக் காலத் தமிழ்ப் பற்றாளர் எழுத்துமுறை. உள்ளடக்கமாக வைக்க வேண்டும் செய்தியை மந்தணம் என்பது நெல்லை வழக்கு.

மந்தைக் குடம்:

இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக் குடம் ஊரின் எல்லை வரை கொண்டு வரப்பட்டு ஊர் மந்தையில் உடைக்கப்படும். அவ்வளவுடன் மகளிர் திரும்புவர். அக் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது. மந்தை ஆடுமாடு அடையும் ஊர்ப் பொதுவிடம். மன்று>மந்து>மந்தை.

மப்பு:

மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில் மிதப்புச் சக்கையை மப்பு என்பது முகவை மாவட்ட வழக்காகும். மரத்தில் வெடிப்பு துளை இருக்குமானால் அதனை அடைக்க வைக்கும் மெழுகை மப்பு என்பது தச்சர் வழக்கு. 'மப்பு மந்தாரம்' அவன் மப்பு அப்படிப்பேச வைக்கிறது என்பவை மக்கள் வழக்குகள்.

மரவை:

உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற ஏனங்களிலோ போட்டு வைப்பது இல்லை. மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர். மரத்தால் செய்யப்பட்டது மரவை ஆகும். இது தென்னக வழக்கு.

மரிச்சி:

மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை ‘மரியாதை’ என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும்.

மருந்து:

மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக்