பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> வட்டார வழக்குச் சொல் அகராதி

391

செய்பவர் ‘காலாடி’ எனப்பட்டனர். கோவை ரங்கே கவுடர் தெருவில் முடவாண்டியர் மடம் உள்ளதாகக் கூறுவர்.

மிளகுசாறு:

ம்

சிற்றூர் எனினும் பேரூர் எனினும் ரசம்' இல்லாத

விருந்து இன்று காணற்கு இல்லை. நெல்லை முகவை

மாவட்டங்களில் மிளகு சாறும், மிளகு தண்ணீரும், சாறும் தூய தமிழாகக் கமழ்கின்றன. ஆங்கிலரைக்கூட மிளகு தண்ணீர் கவர்ந்து அப்படியே ஒலிபெயர்த்து வழங்கச் செய்தது! ஆனால் தமிழர் நிலை?

முத்துமுடி:

நரைத்தல் முதுமை அடையாளம் எனப்பட்ட காலமும், கவலைக்கு அடையாளம் எனப்பட்ட நிலையும் மாறிப் போயது வெளிப்படை. நரையை மாற்ற எடுக்கும் முயற்சிகளை நோக்கினால் கருமுடியின் பெருமை விளங்கும். நரைமுடிக்கு ஆண்டிபட்டி வட்டாரத்தார் ஓர் அருமையான முடிசூட்டு விழா அது முத்து முடி என்பது. வெண்ணிறம் மட்டுமா முத்து! அது, எவ்வளவு விலை மானப் பெருமையது!

எடுத்துள்ளனர்.

முத்தெண்ணெய்:

முத்து என்பது வேம்பு, புளி, ஆமணக்கு முதலியவற்றின் வித்துக்கும் பெயர். முத்தின் வடிவுநிலை கருதியதாகவும், பின் சார்பு கருதியதாகவும் வந்த பெயர் அது. ஆமணக்கு எண்ணெய், விளக்கு எரிக்கப் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் ஆயது. அதனை முத்தெண்ணெய் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு.

முதல்:

முதன்மை, வேர், பழம், விதை, சொத்து எனப் பொருள் தரும் சொல் முதல் என்பது. அது நாற்று என்னும் பொருளில் உழவர் சொல்லாக வழங்குகின்றது. நெல் நாற்று ஒன்றுக்கு, ஆயிரமாய் விளைவது எண்ணத்தக்கது. விளைவைக் கண்டு முதல் என்பதும் எண்ணத்தக்கது.

முதுசொம்:

சாம் என்பது சொத்து என்னும்

பொருள்தரும்

பழஞ்சொல்; இலக்கியச் சொல். வழிவழியாக வரும் சொத்து முதுசொம் எனப்படுதல், யாழ்ப்பாண வழக்காக உள்ளது.

u