பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

மாக இருக்கிறாயா?' என்னும் வழக்குகளால் இலஞ்சியத்தின் அருமை விளங்கும். அரியது அழகியதுமே யன்றோ! இலஞ்சியம் எனப் பெயருடையார் உளர்.

இலைவயம்-அறக்கொடை

மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின்வயமாக வழங்கப் படுதலின் இலைவயமாய்ப் பின்னர் இலவயமாய் அதன் பின்னர் இலவசமாய் வழங்கலாயிற்றாம். இப்பொழுது காசில்லாமல் கொடுக்கும் எதுவும் ‘இலவசம் என வழங்கப்படுகின்றது. பெரியவர்களுக்குத் தருதல், ‘காணிக்கை, கையுறை, அடியுறை, தட்சணை' என இது கால் வழங்குகின்றது. ‘இலவசம்’ என்பது தன் பொருளில் இழிந்து விட்டதால் ஏற்பட்ட இறக்கம் இஃதாம். ஈமொய்த்தல் - அடித்தல்.

"சொல்வதைக் கேள் ; ல் லயானால் உன்முதுகில் ஈமொய்க்கப் போகிறது” என்பர். கேளாவிட்டால் அடிப்பாராம்; அடித்தால் புண்ணாகுமாம் ; புண்ணானால் ஈமொய்க்குமாம். இவற்றையெல்லாம் அடக்கி “ஈ மொய்க்கும்” “ஈமொய்க்கப் போகிறது” என்கிறார். இஃது எச்சரிக்கைக் குறிப்பாம். “அந்நிலை ஏற்படாமல் ஒழுங்காக நடந்து கொள்; எனக்குச் சினமூட்டாதே; சிறுமைப் படாதே” என்பது எச்சரிக்கையாம்.

ஈயோட்டல் - விலையாகாமை.

ஈயோட்டல் நலப்பாடு (சுகாதாரம்) கருதிய செயல், அத னினும் ஈக்கு இடம் கொடாமல் இருப்பது மிக நலப்பாடு. நீர்ப்பொருள் இனிப்புப் பொருள் ஆகியவற்றையே ஈ நாடித் தேடிவரும். அவற்றை ஓட்டாவிட்டால் மொய்த்துக்கிடக்கும். அதனைக் காண்பவர் அப்பொருளை வாங்க மாட்டார். விலை போகா அப்பொருளை ஈவிட்டு வைக்குமோ? ஈயோட்டுவதே விற்பவர்க்கு வேலையாகிப்போகும் ; அதனால் வணிகம் நன்றாக நடைபெறாத கடைக்காரரை ஈயோட்டுகிறார் என்பது வழக்க மாயிற்று. பின்னர் விற்பனை நடைபெறாமல் படுத்துவிட்ட எந்தக் கடையும் ஈயோட்டலாயிற்று.

உச்சுக் கொட்டல் - கேட்டல், ஒப்புக்கொள்ளல், வருத்தம் தெரிவித்தல்

‘உச்’ ‘உச்’ என்பது வாயின் ஒலிக்குறிப்பு, ஒருவர் வருந்தத் தக்க அல்லது உணர்வூட்டத் தக்க ஒரு செய்தியைச் சொல்லும்