பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறி: (1)

வட்டார வழக்குச் சொல் அகராதி

393

எழுதும் ஏட்டை முறி என்பது பொது வழக்கு. ஆனால் முறி என்பதற்குக் குமரி வட்டாரத்தார் ‘அறை' எனப் பொருள் வழங்குகின்றனர். நெடிய வீட்டுப் பரப்பைப் பகுதி பகுதியாக அறுப்பது அறை எனப்படுவது போல முறிப்பதால் முறி எனப்பட்டது. அறையும் முறியும் கை கோக்கின்றன அல்லவா! ‘தறி’ என்பதும் தான் கூடி நிற்க வரவில்லையா?

முறி: (2)

தேங்காயை ரண்ட ாக உடை ப்பர். உடைந்த பகுதியை முறி என்பது வழக்கு. கண்ணுள்ள பகுதியைப் பெண்முறி என்றும், கண்ணில்லாப் பகுதியை ஆண்முறி என்றும் கூறுவர். முறியின் உடைவில் கூட நலம் பொலம் பார்க்கும் நம்பிக்கை உண்டு. இவை தென்னகப் பொது வழக்கு.

முறுக்கான்:

முறு, முறுமுறுப்பு என்பவை முற்றல் வழிப்பட்ட சொற்கள். முறுக்கான் என்பது வெற்றிலை என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முற்றிய வெற்றியை முதற்கண் குறித்துப் பின்னர்ப் பொதுப் கொண்டிருக்கும். வெற்றிலைக் கொடிக்காலில் இளங்கால், முதுகால் என்னும் வழக்கும் உண்டு.

மூச்சி:

ாருள்

முச்சி என்பது வகிடு. அது அகலம் இல்லாமல் நீண்டு எடுக்கப்படுவது. முச்சி என்பது நீண்டு மூச்சியாகி நீளப் பொருள் தருதல் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல்லின் நீட்சி, பொருளின் நீட்சியுமாதல் இரட்டைப் பொருத்தமாம்.

மூச்செடுப்பு:

وو

மூச்சு உள்வாங்கல், வெளியிடல் வழியாக மார்பு அளவெடுத்தல் வழக்கம். அம் மூச்செடுப்பு பொதுவழக்கு கிள்ளியூர் வட்டார வழக்கில் மூச்செடுப்பு என்பது ஓய்வு என்னும் பொருளில் வழங்குகின்றது. “மூச்சுவிட நேரமில்லை என்பது நெல்லை வழக்கு. மூச்சுவிடுதல் என்பதன் ஓய்வெடுத்தல் பொருளை நெல்லை வழக்கு தெளிவு செய்கின்றது. ஒருவட்டார வழக்கை இன்னொரு வட்டார வழக்கு தெளிவாக்குதல் சான் ஈதாம்.