வ
வக்கட்டை:
மெலிந்தவர், ஒல்லி (ஒல்கி) யானவர் என்பதை ஒச்சட்டை என்பர். ஒல்லி என்பதை வக்கட்டை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். இது, உயிரினத் திரிபும், வல்லினத் திரிபும் கூடியதாகும்.
வக்கா
வக்கா என்பது பறவைப் பெயர்களுள் ஒன்று. அதனைக் குறவஞ்சி நூல்களால் அறியலாம். வக்கா என்பது கிளி என்று திருமங்கல வட்டார வழக்கால் அறிய வாய்க்கின்றது. அக்கா, அக்கா என்று சொல்லிப் பழக்குவதால் வக்கா ஆகியிருக்கக் கூடும்.
வங்கணம்:
முகவை
உரிமையுடையவர் அல்லாரொடு பால்வழித் தொடர்பு வைத்திருத்தலை வங்கணம் என்பது வட்டார வழக்காகும். அங்கணம், கழிசடை என்பவை போன்றதொரு வசை வழக்காக ஏற்பட்டிருக்கக் கூடும்.
வங்கு:
66
தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு என்பது முகவை மாவட்ட வழக்கு. வங்கு பிடித்தவன் போல ஓயாமல் சொரிகிறாயே” என்பது பேச்சு வழக்கு. சொரிநோய் பற்றுதலை வங்கு என்பர். சொண்டு சொரி போல்வது வங்கு.
வசி:
கூர்மை, வயப்படுத்துதல், வாள் என்னும் பொருளில் வழங்கும் வசி என்னும் சொல், பரதவர் வழக்கில் சோற்றுத் தட்டு, தட்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. உழைப் பெல்லாம் ஊணுக்கே என்னும் பழமொழியை நோக்கினால்,