பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

_

1

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

வசி என்பதற்குச் சோற்றுத் தட்டு என்பதன் பொருள் விளக்க L மாகும்.

வட்டம்:

வட்டம் என்பது வட்டப் பொருள் தருதல் பொது வழக்கு. அது வட்ட வடிவுடைய தோசைப் பொருளில் வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். வடிவு நோக்கிய பெயர் அது. வட்டம் என்பது வட்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்காக உள்ளது.

வட்டி:

வட்டி என்பது

முதற்பொருளுக்கு

ஊதியமாகக் கிடைக்கும் தொகையைக் குறிப்பது பொது வழக்கு. அது பெட்டி என்னும் பொருள் தருவது அகத்தீசுவர வட்டார வழக்காகும். முதற்கண் வட்டப் பெட்டியைக் குறித்து, பின்னர் பெட்டி என்னும் பொதுப் பொருளுக்கு ஆகியிருக்கும்.

வட்டு:

வட்டு என்பது கமலை வண்டி என்னும் பொருளில் உழவர் வழக்காக வழங்கும். நூல்குண்டு என்னும் பொருளில் கொத்தர் வழக்காக உள்ளது. கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு. குமரி மாவட்டத்தில் வட்டு என்பது மாத்திரை என்னும் பொருளில் வழங்குகின்றது. இதுவும் வடிவு கருதிய வழக்கே. கிறுக்கு என்னும் பொருளில் இரணியல் வட்டாரத்தில் வழங்குதல். சுற்றிச் சுற்றி வருதல் கருதியது.

வடலி:

இளம்பனை என்றும் குறும்பனை என்றும் வடலி என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளல் நெல்லை வழக்காகும். குறும்பனை நாடு குமரிக் கண்டப் பழமையது. பனை வ லி என்னும் நெல்லை மாவட்ட ஊர்ப் பெயர் எண்ணலாம். ஆங்குள்ள குறும்பனைகளைக் கண்டு பொருள் தெளியலாம்.

வண்டு கட்டல்:

வண்டு சுற்றிவருதல், வளையம், வளையமிடும் பூச்சி என வட்டப் பொருளிலே வருதல் பொதுவழக்கு. அப் பொருளிலே வரும் வண்டு கட்டுதல் என்பது உணவுக் கலத்தின் வாய்ப் பகுதியில், ஈ எறும்பு புகாமலும் தூசி தும்பு விழாமலும்