வாங்கு:
வட்டார வழக்குச் சொல் அகராதி
403
வாங்கு என்பது வளைவுப் பொருளது. வாங்கு பிடித்தல் என்பது கணைகளுக்கு வளையம் போடுதலாகும். வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி)க் கம்பைக் குறிப்பதாக மதுக்கூர் வட்டார வழக்கில் உள்ளது. வாஞ்சனை:
66
وو
வாஞ்சனை, (வாஞ்சை) என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். 'அவனுக்கு என்மேல் வாஞ்சனை மிகுதி. அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான் வாஞ்சனையை மதித்துக் கூறுவர். து நெல்லை வழக்கு.
வாட்டம் (1):
என
வாடிப்போதல் எனப்படும் வாட்டம் வேறு. இது நீர் வழியும் சரிவு எனப்படும் வாட்டமாகும். மனையில் தளம் போடும் போது, அதனைக் கழுவி விடும் நீர், தானே வடிந்து வெளியேறும் வகையில் சாய்தளமாக அமைப்பது வாட்டம் எனப்படும். நீர்வாட்டம் என்பர். ம் என்பர். இது கொத்தர் வழக்கு. வாட்டம் (2):
வாட்டம் வாடுதல், நீரோட்டம், சரிவு என்று பலவகைப் பொதுப் பொருள் தரும் சொல். அது பசி என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் உள்ளது. பசி தானே வாட்டத்தை உண்டாக்குவது. நீரில்லாப் பயிர் வாடுதலும் அதுதானே.
வாட்டி:
வாட்டுதல் பொருளிலோ வதைத்தல் பொருளிலோ வாராமல் தடவை, முறை என்னும் பொருளில் சேரன்மா தேவி வட்டாரத்தில் வழங்குகின்றது. “எத்தனை வாட்டி சொல்லியும் அவன் கேட்க வில்லை” என்பர். வட்டம் சுற்றும் எண்ணிக்கை வழி வந்த சொல் இது. வளையம் என்பது போல.
வாடி:
மரவாடி எனப்பல இடங்களில் பெயர்ப் பலகைகளை நாம் காண்கிறோம். வாடி என எப்படிப் பெயராயது? மரம் அறுக்க மேலே உயர்த்தி கீழே தாழ்த்தி மரத்தை அரம்பத்தால் அறுப்பர். உயரம் தணிந்து வருமாறு அறுவைப் பட்டடை அமைப்பதால் வாடி (வாட்டமானது, சரிவானது) எனப் பெயர் கொண் மரக்கடை வழக்கு இது.
து.