வட்டார வழக்குச் சொல் அகராதி
405
ர
வாயோடு என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும். உறைப்பெட்டி என்பது பொது வழக்கு.
வாரங்கால்:
ல
வார்கால், வடிகால், சாய்க்கடை என்பன நீர்ப் போக்கிகள். வடிகாலை வாரங்கால் என்பது முகவை வட்டார வழக்கு. வார்தல் என்பது ஒழுகுதல் பொருளது.
வாராடை:
தென்னை, பனை, தாழை முதலியவற்றின் நாரைக் கிழிக்கப் பயன்படுத்தும் கத்தியை வாராடை என்பது குமரி மாவட்ட வழக்காகும். வார்தல் நெடுகக் கிழித்தலாம். வாரங்கால் காண்க. வாராவதி:
பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை ‘வருவழி' வாராவதி என மக்கள் வழக்கில் ஏற்பட்டிருக்கலாம். பாலம் என்பது இப்பாலும் ( பக்கத்தையும்) அப்பாலும் (அப் பக்கத்தையும்) இணைப்பது என்னும் பொருளது. அது தமிழகப் பொது வழக்குச் சொல். வாரி:
இப்
வாரி என்பது நெடுங்கம்பு, கடல், வருவாய் எனப் பொதுப் பொருள் பல கொண்ட சொல். இச் சொல் திண்டுக்கல் வட்டாரத்தில் வாய்க்காலையும் கமலைத் தடத்தையும் குறித்து வழங்குகின்றது. நெடுங்கம்பு வாரி எனப்படுதல் வண்டியில் பார மேற்றப் பயன்படுத்தும் வாரிக்கம்பு ஆகும்.
வாரியன்:
வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் னையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்கு எடுத்துக் கொண்டுவந்து பரப்புதல் வழியால் வந்த
கின்றது. பொருள். வாழிபாடல்:
உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய் விடும்.