இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வையிட்டு:
வட்டார வழக்குச் சொல் அகராதி
413
வைகிருட்டு என்பது வைகு இருட்டுப் பொழுது; மாலைக் கருக்கல் என்பதும் அது. இது குமரி மாவட்ட வழக்கு. வைகறை என்பது வைகிய இருளை அகற்றும் விடிகாலை என்பது. வைகிற்று என்பது இருட்டாயிற்று என்னும் இலக்கிய ஆட்சியது. மாலையை வைகும் நேரம் என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. வைத்தூற்றி:
புனல் எனக் கூறப்படும் கருவியை வைத்தூற்றி எனக் குமரி மாவட்ட முஞ்சிறை வட்டாரத்தார் வழங்குகின்றனர். புட்டிலில், தகரத்தில், குடத்தில் வைத்து ஊற்றும் வாயகல் குழலை வைத் தூற்றி என்பது இயல்பான பொருள் விளக்கப் படைப்பாகும். பாவாணர் அன்ன புலமக்களும் போற்றிய சிறப்பினதாம்.