பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

ஏனென்று கேட்டல் - தடுத்தல், தட்டிக் கேட்டல்

33

‘ஏன் என்பது வினா, எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந் துள்ளது. “ஏன் என்பதற்கு ஆள் இல்லாமல் போனதால் எதுவும் செய்யலாம் எனத் துணிந்து விட்டான்” “ஊரில் அவன் இல்லை; னென்று கேட்க ஆளில்லை; எது எதுவோ தலைகால் தெரி யாமல் ஆடுகின்றது என்பன போன்றவற்றில் ஏன் என்பது தடுத்தல் பொருளில் வருவது தெளிவாகும். தட்டிக்கேட்டல் என்பது தடுத்து நிறுத்திக் கேட்டல் என்பதாம்.

وو

ஒட்டப்போடல் - பட்டுணி போடல்

-

ஒட்ட-வயிறு ஒட்ட. வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக் கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒருவேளை ஒரு நாள் - பட்டுE என்பதின்றிப் பலநாள் பட்டுணி என்றால் முதுகு எலும்பொடு வயிற்றுத் தோலும் ஒட்டிப் போனது போல் குடை பட்டுப் போகும். அதனை ஒட்டப் போடுதல் என்பர். உன்னை ஒட்டப் போட்டால்தான் ஒழுங்குக்கு வருவாய்; வேளை தவறாமல் வயிறு முட்டப் போட்டால் சரிப்படமாட்டாய்” எனத் திட்டுவர். பட்டு என்பது தடை இடை விட்டு, உணி உண்பது. தடை

-

டை

-

இடைவிட்டு பல வேளைகள், சில நாள்கள் உண்பதே பட்டுணியாம்.

ஒடுக்கம் - துறவியர் அடக்கமாகிய இடம்

டை

டை

விட்டு

ஒடுக்கமான குறுகலான இடம் ஒடுக்கம் என்று சொல்லப்படும். அடக்கத்தின் பின்னர் நிகழ்வது ஒடுக்கம். அதனால் அடக்க ஒடுக்கம் என வழக்கம் உண்டாயிற்று.

அடக்கம் அடங்கும் தன்மையைக் குறியாமல் மூச்சை முழுவதாக நிறுத்திவிடுவதைக் குறிப்பதுபோல், ஒடுக்கம் ஒடுங்கிய இடத்தைக் குறியாமல் அடங்கிவிட்டவர்களை ஒடுக்கி வைக்கப்பட்ட புதை குழி மேடையையும், அதனைச் சூழ எழுந்த ப்பகுதியையும் குறித்து வழங்குவதாயிற்று. துறவியர் களின் ஒடுக்கங்கள் தமிழகத்தில் பலப்பல இடங்களில் இருப்ப தும், ஆங்கு வழிபாடுகள் நிகழ்வதும் கண்கூடு.

-

ஒத்தூதுதல் - ஆமாம் ஆமாம் எனல்

நெடுவங்கியம் (நாத சுரம்) ஊதுவார் ஒருவர். அவர்க்கு ஊதல் நிறுத்தல் மாறல் ஆகிய இசை முறைகள் பல உண்டு.