பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் 1

ஆனால் பின்னே ஒருவர் ஒத்து ஊதிக் கொண்டே இருப்பார். முன்னவர் என்ன ஊதினாலும் ஒத்து ஊதுபவர் ஒரு போக்கிலேயே ஊதிக் கொண்டிருப்பார். இவ்வழக்கைக் குறித்து, ஒருவர் பேசுவதைப் பற்றிக் கருதாமல் எல்லாமும் ஆமாம் ஆமாம் என்பது போல ஒத்துப் பேசுபவரைக் குறித்து வழங்குவதாயிற்று. ஒதுக்கம் ஒதுங்கும் இடம்

-

ஒதுங்கிய இடம் - ஒதுக்கமான இடம் ‘ஒதுக்கம்' எனப் படும். ‘ஒதுக்கப்பட்ட இடம்' என்பதும் ‘ஒதுக்கிடம்' என இந்நாள் வழக்கிலும் உள்ளது. இங்குச் சொல்லப்படும் ஒதுக்கம் வேறு. அயற்பாலினர் அரவம் இல்லாமல் ஆடவரும் மகளிரும் தனித் தனியே கழிப்பிடம் நாடுதல் இந்நாட்டில் பெருவழக்கு. சிற் றூர்களில் இன்றும் அந்நிலை மாறிற்றில்லை. அப்படி ஒதுங்கும் இடத்திற்கு 'ஒதுக்கம்' என்பது பெயர். ஒதுங்குதல் என்பது நீர் கழித்தலுக்கும், மலங்கழித்தலுக்கும் ஒதுங்கி மறைதலைக் குறித்து வந்ததாம்.

ஒப்பேற்றுதல் - காலம் தள்ளல், சரிக்கட்டல், உயிரோடு இருத்தல்

பிறர் பிறருக்கு ஒத்தபடி உண்ணவோ உடுக்கவோ வாய்ப்புப் பெறவோ முடியாத நிலையில் இருப்பவர்கள். தங்கள் நிலைமை வெளியாருக்கு வெளிப்படாத வண்ணம் பிறருக்கு ஒப்பாகத் தாமும் வாழ்வது போலக் காட்டிக் கொள்வர். இருப்பதை உண்டு உடுத்தாலும் வெளியாருக்குப் புலப்படாவண்ணம் திறமையாக நடந்து கொள்வர். இதற்கு ஒப்பேற்றுதல் என்பது பெயர். 'ஏதோ ஒப்பேற்றி வந்தால் இப்படியோ காலம் போய்விடும்! காலம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும்” என நம்பிக்கை யோடு இருப்பர். ஒப்பேற மாட்டான்” எனின் பிழைக்க மாட்டான் என்னும் பொருளும் உண்டு. அது உயிரோடு இருத்தல் பொருளது. ஒய்யாரம் - பொய்ப்புனைவு செருக்கு

66

'சின்மலர் சூடல்' என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப்பன்மலரும் சுமையெனக் காட்சியளிப்பதும் உண்டு. அத்தகு பன்மலர்க் கொண்டை ‘ஒய்யாரக் கொண்டை' எனப்படும். அக் கொண்டை ஒப்பனையும், அதனையுடையார் நடையுடையும் எவரையும் புதுப்பார்வை பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கும். அந்த்தகையவரை ‘ஒய்யாரி’ என்பர். “ஒய்யாரக் கொண்டையாம்