பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

35

தாழம் பூவாம்; உள்ளே இருக்கும் ஈரும் பேனும்” “என்பது பழமொழி. “சிங்காரி ஒய்யாரி” என்பது நாடகப் பாட்டு.

ஒருவன் - இறைவன்

ஒருவன்

·

ஆண்பாற் பெயர், படர்க்கைப் பெயர், பொதுமைத்தன்மையமைந்த பெயர். ஆனால் எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவ னாருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே குறித்து வருமிடமும் வழக்கில் உண்டு. அவன் ஒருவன் ‘இறைவன்.’

அவனன்றி அணுவும் அசையாது: அவன் ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஒருவன் துணை; அந்த ஒருவனை எவரும் ஏமாற்ற முடியாது” என்பவற்றில் வரும் அவன், அவனொருவன் என்பவை இறைவனுக்காதல் அறிக. ‘ஒருவபோற்றி, என்பதொரு போற்றி.

ஒற்றடம்வைத்தல் - அடித்தல்

ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால் ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்! வீங்குமாம். அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம். இவற்றை உள்ள க்கிய குறிப்பு ஒற்றடம் வைத்தலாம். ஒற்றி ஒற்றி எடுப்ப தால் ஒற்றடம், அடம்-ஈறு; கட்டடம் என்பதில் வருவதுபோல சாணி ஒற்றடம், சாம்பல் ஒற்றடம், துணி ஒற்றடம், மண் ஒற்றடம், வெந்நீர் ஒற்றடம், உப்பு ஒற்றடம் என அதன் வகை பல.

ஒன்பது - பேடு, (அலி)

ஒன்பது உருபா நோட்டு' என்பதன் சுருக்கமே ஒன்பது என்பதாம். ஒன்று இரண்டு ஐந்து பத்து என பணத்தாள் நோட்டு உண்டேயன்றி ஒன்பது இல்லை. ஆதலால் ஒன்பது என்பது இல்லாதது' என்னும் குறிப்பினது. ஆண்மை இழந்த பேடியின் தோற்றம் பெண்மைக் கோலமாகத் தோற்றம் தரும். கொண்டை வைத்தல் பூச்சூடல் மஞ்சட் குளிப்பு ஆயவும் உண்டு. பேச்சும் நடையும் பெண்மைச் சாயலாயமையும்.

இத்தகையரை ‘ஒன்பது’ என்பர். இது செல்லுபடியாகா தது என்பது குறிப்பாம். இத்தகையர் சுண்டல், கடலை வணிகம் செய்தல் காணக்கூடியது.