பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

ஓடெடுத்தல் - இரந்துண்ணல்

37

துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு, தேங்காய் ஓடு போன்ற தாகிய ஒரு மரத்தின் காயோடேயாகும். துறவுமேற்கொள்ளாத பிச்சையர் மண்சட்டியை எடுத்து இரந்துண்பதும் உண்டு. அதுவும் ஓடு எனவே படும். வறுப்பதற்கு உரிய ஓடு வறை யோடு' என்றும் கட்டடத்து மேற்தளத்தில் பரப்பும் சிற்றோடு தட்டோடு என்றும் வழங்கப்படுதல் அறிக. ஓடெடுத்துக் கொண்டு பிச்சையேற்று உண்பதே ஓடெடுத்தல் என வழக்காயிற்று. தமக்கு ஏழ்மையுண்டு என்பதை ஏற்க மனமில்லாதவர், “நானென்ன ஓடெடுத்துக் கொண்டா திரிகிறேன்” என்பர்.

ஓலுப்படல் - அல்லலுறல்

ஓலுறுத்தல் விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ் வுறுத்தல் பொருளது. செல்வக்குழந்தைகளை வளர்க்கும் தாய்மார் களுள் ஒருத்தி ‘ஓலுறுத்தும் தாய்’ அவ்வோலுறுத்தல் குழந்தை யின் அழுகை அமர்த்தி இன்புறுத்துபவள். இவ்வோலுப்படல் என்பது மகிழ்வு இழத்தல் மட்டுமின்றி அல்லலுறுதலுமாம். படல் என்பது இழப்புச் சுட்டும் சொல். உண் ாதல் பொருளிலும் படல் வரும். அழிதல் கெடுதல் பொருளிலும் வரும். பயிர் படுகிறது, பயிர்பட்டுப் போனது என்பவற்றிலுள்ள படுதல் அறிக. 'பட்ட மரம்' என்பதும் அறிக.

ஓவியம் - அழகு, அருமை

ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம் எனப்படுகின்றதாம். ஓவியம் கண்டார் கண்ணையும் கருத்தையும் வயப்படுத்துதலால் அதனை வரையும் ஓவியரைக் கண்ணுள் வினைஞர் என முன்னை யோர் குறித்தனர். காண்பார் கண்ணிடத்தே தம் கலைத்திறம் காட்டவல்லார் என்பது அதன் பொருள். ஓவியம் அழகாக இருத்தலின் அழகுக்கே ஓவியம் என்னும் ஒரு சொல்லும் உண்டா யிற்று, ‘நீ பெரிய ஓவியம்' என்பதில் அழகு அருமை என்னும் இரண்டும் சுட்டிய எள்ளல் உண்மை அறிக.

கச்சை கட்டல் - ஏவிவிடல்

கச்சை என்பது இடுப்பில் கட்டும் உடையையும், இடை வாரையும் குறிக்கும். கச்சை கட்டுதல் போர்க்குப் புகுவார் செயல். அதனால் கச்சை கட்டுதல் என்பது ஏவிவிடல் பொருளுக்கு