பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

1

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

உரியதாயிற்று. ஒருவர் எதிர்பாரா எதிர்ப்பின்போதோ தடுப்பின் போதோ அமைந்திருப்பார். அவரைச் சில சில சொல்லி எதிர்த்து எழுதற்கும், தாக்குதற்கும் ஏவிவிட்டு விடுவர் சிலர். தனைக் கச்சைகட்டுதல் என்பது வழக்கு.

கசக்கிப் பிழிதல் - கடுமையாய் வேலை வாங்கல்

பழங்களைக் கசக்குதலும், கசக்கியதைப் பிழிந்து சாறு எடுத்தலும் நடைமுறைச் செய்தி. அதுபோல் சிலரை வாட்டி வேலை வாங்கி அவ்வேலையால் கிடைக்கும் பயனைத்தாமே எடுத்துக் கொள்ளுதல் செல்வர்கள் அல்லது அச்செல்வார்க்குத் துணை நிற்பார் செயல். இச் செயலை உவமையால் குறிப்பதே கசக்கிப் பிழிதல் என்பதாம். கசக்குதல் என்பது இடக்கரடக் காகவும் வரும்.

பழங்களையன்றிக் கரும்பை ஆட்டிச் சாறு கொள்வதும் அச்சாற்றால் கட்டியாக்கிக் கொள்ளலும் ‘ஆட்டிப் படைத்தல்’ எனப்படும். மாவாட்டல் எண்ணெய் ஆட்டல் என்பனவெல்லாம் இவ்வகை சார்ந்தன.

கசிதல் - அன்புறுதல்

புது மண் பானையில் நீர்வைத்தால் கசிவு உண்டாகும். அதுபோல் குளக்கரை, வயற்கரை, வரப்பு ஆகியவற்றிலும் நீர் உள்ளபோது கசிவுண்டாம். கசிதல் என்பது நீர் சிறிதளவாய் ஊறி வெளிப்படுதலாம்.

இனி இக் கசிதல் அன்புடையார்க்கும் உண்மை, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்னும் குறளால் விளங்கும். ஒருவனிடத்தே அன்பு உள்ளது என்பதற்கு அடை யாளமாக இருப்பது கண்ணீர் எனப்படுத லால் அக் கண்ணீர்க் கசிவே இங்குக் குறிக்கப்படுவதாம். “உனக்குக் கசிவே இல்லை; உன்மனம் என்ன கல்லா; இரும்பா எனவெதும்பி உரைப்பார். உரையில் கசிவு அன்பாதல் விளங்கும். கஞ்சி காய்ச்சல் - கிண்டல் செய்தல்

கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய புல்லிய தவசங்களை இடித்து அரைத்து மாவாக்கி ஊறவைத்தும் புளிப்பாக்கி உலை யிட்டுத் துடுப்பால் கிண்டிக் கிண்டிக் கஞ்சி காய்ச்சுதல் வழக்கம். கஞ்சியாவதற்குள் அதுபடும் பாடு பெரும்பாடு. அப்பாடுகள் எல்லாம் ஒருவனைப்படுத்துதல் கஞ்சி காய்ச்சலாக வழங்கு கின்றதாம். கிண்டல், கேலி, நகையாண்டி படுத்துதலே இங்குக்