பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் 1

விட்டீர்கள்; இல்லாவிட்டால் என்ன நடக்கும் நடந் திருக்கும், என்பது எனக்கே தெரியாது” என்பது உண்டு. பாரதக் கதையில் தருமன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்ற வீமன் முத லானோர் கொதிப்படைய “கட்டுண்டோம் பொறுத்திருப் போம்; காலம் மாறும், என்று தருமன் கூறியது கருதத்தக்கது. கட்டுப்படுதல் - கட்டளைக்கு உட்படுதல்

பெற்றவர்கள் பெரியவர்கள் என்பதால் அவர்கள் சொல்வது மனத்திற்கு ஒவ்வவில்லை எனினும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு நடப்பதுண்டு. அதற்குக் கட்டுப்படுதல் என்பது பெயர். நன்றியறிதல் காரணமாகவும் நன்றி செய்தாரை நினைந்து கட்டுப்பட்டு நடத்தலும் உண்டு. ஊர்க்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலைமை அண்மைக் காலம் வரை இருந்தது. இதில் வரும் ‘கட்டு’ ஆணை என்னும் பொருள் தருவதாம். ‘ஊர்க்கட்டு' மீறலாமா என்பது வழங்கு மொழி. தலைவன் சொற்படி நிற்கும் குடும்ப ஆட்சியைத் தலைக் கட்டு என்பது வழக்கு.

கட்டை

உடல்

உயிரற்ற உடலைக்கட்டை எனல் வழக்கம். உயிருள்ளவரும் துறவு நிலையில் தம்மைக் கட்டை என்பதும், வெறுப்பு நிலைக்கு ஆட்பட்டோர் தம் உடலைக் கட்டை என்பதும், வழக்காம். இந்தக் கட்டை இங்கே போகிறது. இந்தக் கட்டை இன்ன சொல்கிறது என்பது வேடத்துறவோர் உரை. வெறுப்புற்றோரும் இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டிக்கிடக்கிறது. என்பதும் உண்டு. இவர் கூற்றிலும் கட்டை என்பது உடலையே குறித்தது, இனி, ‘கட்டை'யிலேபோவான் என்னும் வசை மொழியில் உள்ள கட்டை இடுகாட்டில் இக்கட்டையை எறிக்க உதவும் விறகுக் கட்டையைக் குறிப்பதாம். கட்டு அழிந்ததைக் கட்டை என்றனர் போலும். கட்டு நீர், வளம், இலை, தழை முதலியன. கடித்தல் - சண்டையிடல்

நாய் பூனை முதலியவை ஒன்றையொன்று பகைத்தால் கடிப்பாலேயே தம் பகையைத் தீர்க்கும். கடித்தல் அவற்றின் சண்டைக்கு அறிகுறி. ஆனால் அந்நாயும் பூனையும் நட்பாக இருக்கும்போதும் கடிக்கும். அதனைச் சண்டைக் கடியாகக் கொள்வதில்லை. பொய்க்கடி, அன்புக்கடி எனப்படும். அவ்வாறே