பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

41

நெருங்கிப் பழகிய இருவர் தங்களுக்குள் சண்டையிடும்போது, “என்ன இருவரும் இந்தக் கடி கடிக்கிறீர்கள்! இந்தக் கசிவும் வேண்டாம்; இந்தக் கடியும் வேண்டாம்” என்று அவர்களை அறிந்தோர் அறிவுரை கூறுவது வழக்கம் “போதும்; கடியாதே” எனச் சண்டையிடுபவர் தங்களுக்குள் கூறுவதும் உண்டு. கடிப் பவர் அடுத்த நேரமே கடி மறந்து கசிபவர் என்க.

கடுவாய் நோட்டு - நூறு உரூபாத்தாள்

கடுவாய் என்பது பெரும்புலி! பதினாறு அடி தாவும் வேங்கையைக் கடுவாய் என்பர். அதன் பிளந்த பெருவாயை யும் அதன் கொடுங்காட்சியையும் கண்டு கடுவாய் என்றனர். ‘கடுவாய்' எளிமையாகக் காணக் கூடிய விலங்கில்லை. செறிந்த காடுகளின் இடையே அரிதில் வாழ்வது. அதனைத்தேடி முயன்றே காணமுடியும். அதுபோல் அரிதில் காணக்கூடிய பெரிய பணத்தாள் ‘கடுவா நோட்டு' எனப்படுகிறது. முன்பு நூறு மட்டும் தேடு; நூற்றுக்கு மேல் ஊற்று' என்பது பழமொழி. இப்பொழுது நூறு உருபா என்பது பழைய சல்லிக் காசு நூறுக்கு ஒப்பு. கடுவா நோட்டு என்பது பழநாள் பணத்தாள் மதிப்பை விளக்கும் வரலாற்று வழக்காறாம்.

கடைகோடி – ஆகக் கடைசி

கடை என்பது கடைசி என்னும் பொருளது, கோடி என்பது கடைசி என்னும் எண்ணுப் பெயர். அது 'தெருக்கோடி’ தெற்குக் கோடி என இடத்தின் கடைசியைக் குறிப்பதுமாயிற்று. இவ் விரண்டுஞ் சேர்ந்து ‘ஆகக் கடைசி’ என்னும் பொருள் தருவதாக வழக்கில் ஊன்றியுள்ளது. கடைகோடி வீடு, வயல் என்பன

வழக்குகள்.'

கடைந்தெடுத்தல் - அகவையை மீறிய அறிவு

தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்ததிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காயவைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக் கடைந்தால் வெண்ணெய் திரளும். அத்திரள் சிறிதாயினும் அப்பாலின் ஊட்டம் அனைத்தும் அத்திரளில் அடங்கிவிடுகிறது. அது போல் சிறிய அகவையில் பெரிய ஆளுக்குரிய அறிவு ஆற்றல் வினாவுதல் இருப்பின் ‘கடைந்தெடுத்தவன்’ அவன் என்பர். ஆனால் பாராட்டுதலாக அஃது அமையாமல் இகழ்தலாக வழங்குகின்றது. ஏனெனில் அகவைக்கு விஞ்சியதும் பொருந்