பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம்

1

என்றும் 'சிறு

66

தாததும் ஆகிய அறிவுக்கூர்ப்பே அவ்வெளிப்பாடாக இருத்தலால் சிறந்ததாக இருந்தால் “சிறுப்பெருமை முதுக்குறைவு” என்றும் சொல்லப்படும்.

கண்ணசைத்தல் - குறிப்புக் காட்டல்

கண்ணசைத்தல் என்பது, அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். 'கண் சாடை காட்டுதல்' என வழக்கில் உள்ளது இக்கண்ணசைப்பாம். காரிகையார் கடைக் கண் காட்டல் காதலர் கண்ணடித்தல் என்பவை வேறு வேறு. அவ்வழக்கில் அவற்றைக் காண்க.

தலைமையுடைய ஒருவர் பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தம் பணியாளர்க்கு அல்லது தம் குடும்பத் தவர்க்குக் கண்ணசைப்பால் காட்டுவதே இக்கண்ணசைப்பாம். “கண்ணசைத்தும் உனக்குத் தெரியவில்லையே! நீ எப்படிப் பிழைக்கப்போகிறாய்?" என்பது குறிப்பறிந்து செயலாற்றா தவர்மேல் சொல்லப்படும் குறைமொழி.

கண்ணடித்தல் - காதல் குறிப்புக் காட்டல்

இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப் புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்ணில் தெரியும்; அக்கண்ணின் முதிர்வு கண்ணின் கடைமணியிற் புலனாம் என்பது மெய்ப்பாட்டுக் கூறு.

கண்ணடித்தல் காதலைப் புலப்படுத்துவதுடன் பிறர் வரவு, கூறத்தக்கது தகாதது, புறப்படலாம், புறப்படவேண்டா முதலான கெழுதகைக் காதற் பேச்சுகளையும் கண்ணடித்தலே பேசிடும். ஆதலால் கண்ணடித்தல் படிப்பு, காதலில் பெரும் படிப்பு என்பர். ஏனெனின் அதனைப் படியாக்கால் வேண்டா இடருக்கெல்லாம் வித்தாகிவிடும் என்பது அவர்கள் தெளிவு. கண்ணாம் பூச்சி காட்டல் - அங்கும் இங்குமாக ஏமாற்றல்

L

வி

கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு; கண்ணைக்கட்டி எங்கேயோ விட்டு விட்டு மறைந்து கொள்வதும் தேடிப் பிடிப்பதும் விளை யாட்டாக உள்ளது. இச்சிறுவர் விளையாட்டுக்கு ஒப்பச் சிலர் இப்படி அப்படி என மாற்றி மறைத்து ஓட்டங்காட்டி ஏமாற்றித் திரிவர். அத்தகையரை “என்னிடம் கண்ணாம் பூச்சி காட்டு கிறாயா?" என்பது வழக்கு.