பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

1

கடைக்கண் காட்டல் - குறிப்பால் கட்டளையிடல்

க்

கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெனின் இக் கடைக்கண் க்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல் வினை யின்றிக் காட்டல் அளவில் நின்றதாம்.

"காரிகையார் கடைக்கண் காட்டிவிட்டால் மைந்தர்க்கு மாமலையும் சிறு கடுகாகும்” என்பார் பாவேந்தர். அவ்வளவு எளிமையாகப் புரட்ட வைத்து விடுமாம் அக்காதற் கண் காட்டல்! ‘இந்த வில் என்ன, எந்த வில்லையும் முரிக்க முடியுமாம் சீதையைக் கண்ட ராமனுக்கு’

66

குறிப்பறிதல்,” என்னும் ஓரதிகாரப் பெயர் ஈரிடத்து வள்ளுவத்தில் இயைந்தமையே இதன் நுண்மையைக் காட்டும். கத்தரிப்பு - பிளப்பு ; பிரிப்பு

கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவிகள். கத்தரித்தல் தொழிற்பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது செய்யும் தொழிலை உட்கொண்டு. “எங்கள் நட்பை அல்லது உறவை அவன் கத்தரித்து விட்டான் என்பது வழக்கில் உள்ளது. "கத்தரிக்கவும் அவனுக்குத் தெரியவும்; மூட்டவும் தெரியும்” என்பது பிளக்கவும், பிளந் தாரைக் கூட்டவும் வல்லாரைக் குறிக்கும் வழக்குச் சொல். ஒருவருக்குத் தம் முயற்சியால் கிடைக்க இருந்த வேலை மற் றொருவர் கத்தரியிட்டதால் கிடையாது போனதைச் சுட்டுவார் திரு.வி.க. (வாழ்க்கைக் குறிப்புகள்)

கத்தி கட்டல் - சண்டைக்கு ஏவி விடல்

'சேவற்போர்' ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து அவற்றை மோதவிட்டுப் பார்த்து மகிழ்ந்த வர்கள், அவற்றின் கால்களில் கத்தி கட்டிவிட்டுப் போருக்கு விட்டனர். சேவல்கள் ஏவிவிட்டவுடன் எதிரிட்டுத் தாக்கிக் கத்தி பிளக்கக் குருதி கொட்டினாலும் உயிர் காட்டினாலும் உயிர் போனாலும் பின் வாங்காது தாக்கும். வெல்லும்; அல்லது வீழும். இவ்வழக்கில் இருந்து ருவரை ஏவிவிட்டுச் சண்டை போட அல்லது பகைத்துத் தாக்க வைப்பது கத்திகட்டலாக வந்தது. கதைவிடல் - புனைந்து கூறல்

கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு, கட்டுமானத்தால் விரித்துக் கூறு