பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம்

1

யாளமாக

கூட வழக்கில் இருந்தது. கயிறு மட்டுமே அடை இருப்பதும் உண்டு. ஆதலால் தங்கத்தில் இருந்தாலும் தாலிக் கயிறு, தாலிச்சரடு என்னும் வழக்கம் மாறாமல் ன்றும் உள்ளது.

கயிறு திரித்தல் - புனைந்துரைத்தல்

உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு. உருட்டுவார், தொடையில் ருட்டுவர். திரிப்பார் கையால் திரிப்பர். விளைவு ஒன்றாக இருப்பினும் வினையாற்றும் முறையால் சிறிது வேறுபாடு மட்டுமேயுண்டு. கயிறு திரித்தல் போல் சில செய்திகளைப் புனைந்து கூறுதல் உண்மையால் அப் பெயர் பெற்றது.

கரியாக்கல் - அழித்தல், சுட்டெரித்தல்

கரியாக்குவோர் அக்கரிக்காக எரிக்கக்கூடாத உயர் மரத்தை யும் தீ மூட்டி எரிப்பதுண்டு. அவர்களுக்குத் தேக்கானால் என்ன, சந்தனம் ஆனால் என்ன, வேண்டுவது கரி. அவ்வளவே. அது போல் சிலர் எளியதும் வேண்டாததுமாகிய தம் செலவுக்காக விற்கக் கூடாத அரிய பொருள்களையும் விற்றுவிடுவது உண்டு. அதனைக் குறிப்பது கரியாக்கல் என்னும் வழக்கம். “போன இடத்தைக் கரியாக்காமல் போகமாட்டானே' கமாட்டானே” என்பது கரி யாக்குவானுக்குத் தரும் சான்றுரை.

கல்லும் கரைதல் - இரக்கமில்லானும் இரங்கல்

-

-

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது பழ மொழி. கல்லையும் கரைய வைக்க முடியும் என்பதை அது காட்டும். ஆனால் இக்கல் கரைதல், கல் போன்ற உள்ளம் கரைந்து இரா ரங்கி உதவுதலாம். சிலர் கையை அறுத்துக் கொண்டாலும், "தொட்டுத் தடவச் சுண்ணாம்பும் தாரார்’ எனப் பேர் பெற்றிருப்பர். அத்தகையரும் சில வேளைகளில் ஏதோ உதவக் கண்டால், “அந்தக் கல்லுமா கரைகிறது. அந்தக் கல்லுக்குள்ளுமா ஈரம் இருக்கிறது ருக்கிறது” என்பர். என்பர். இரங்காதவர் இரங்கல் என்பது பொருளாம். கழற்றிவிடுதல் - பிரித்தல்

ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் T ‘கழற்றல்' எனப்படும். அணிகலங்களைத் திருகுவாய், பூட்டு வாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகைய பருப்பொருளாம் கழற்றுதல், ஒரு நிகழ்ச்சியில் இருந்தோ,