பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

போல

எளிது

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

இயல்பாகிவிட்டது. “இப்பொழுதே கழித்துவிட்டால் “கழிக்க நாட்பட்டால் வெளிப்பட்டுவிடும்” “கழிக்க ஒன்றும் சுணக்கம் இல்லை, எவருக்கும் ஐயம் வராது” என்பன வெல்லாம் எங்கும் கேட்கும் செய்திகள். எவரும் அறியார் என அறிந்து அறியச் செய்யும் செயல்கள்.

கழுத்து ஒடிதல் - அளவில்லாத பொறுப்பு

தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்கமாட்டாமல் வளையும்; குழையும்; சுளுக்கும் உண்டாம். தலைமேல் உள்ள பொருளை அப்படியே தள்ளி விடவும் நேரும். அந்நிலையில் அத் தாங்க மாட்டாச் சுமையைக் கழுத்தை ஒடிக்கும் சுமை என்பர். அது போல் ஒருவர் குடும்பம் பெரிதாகி விட்டாலோ, பொறுப்பு அளவு கடந்து மிகுந்துவிட்டாலோ ‘கழுத்து ஒடிகிறது' என்பது வழக்கு. தாங்க முடியாத அளவில்லாத பொறுப்பு என்பது பொருளாம்.

கழுதைப்பிறவி - சுமை சுமத்தல்

கழுதை யென்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. அது போல் சிலர்க்கும் தாங்க மாட்டாக் குடும்பச் சுமை அமைந்துவிடும்போது “கழுதைப் பிறவியாகி விட்டது’ சுமந்து தானே ஆகவேண்டும்; வேண்டா எனத் தள்ளினால் நம்மை விட்டு போகுமா”; என்று நொந் துரைக்கும் வழக்கு உண்டாயிற்று.

சரி; சுமை தாங்க முடியாதென ஓடிவிடவேனும் முடியுமோ? அதுதான் காலில் தளை போடப்பட்டுள்ளதே! இவனுக்குத் தளை மனைவி மக்களாமே! தளை போடல் கால் கட்டு’ ஆதலைக்காண்க.

களமாக்கல் -இல்லாமை அல்லது வெறுமையாக்கல்

களம், போர்க்களம். சூடடிக்கும் நெற்களம், உழவர்களது. போர் புரியும் செங்களம், வீரர்களது. பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப் படுத்துவது நெற்களமாம். இல்லாக்கால் அதில் கதிரடிப்பு, பிணையலிடல் என்பவற்றைச் செய்வதற்கு வாய்க்காது.ஏர்க்களமாக்கல் இது. போர்க்களமாக்கினால் என்ன ஆகும்; எல்லாக் கொடுமைகளுக்கும் இடமாகும். வாழ்வா ரெல்லாம் வன் சாவுக்கு இரையாவர். ஆதலால் களமாக்கல் அழிப்பு வேலையாகவே அமைந்துவிடும். தம் குடியைக் கெடுக்கும்