பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

49

மக்களை, ‘நீ களமாக்கி விடுவாய்' எனப்பழிப்பது முதியவர்கள் வழக்கு.

களவு - உள்ளத்தைக் கவர்தல்

களவு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது. பிறர்க்கு உரிமைப்பட்ட ஒன்றை அவரறியாமல் வஞ்சித்துக் கவர்ந்து கொள்வதே களவாம். இப்பொல்லாக் களவினைத் தவிர்த்து உலகில் பெருக வழங்கும் களவும் உண்டு. அது நல்ல களவென நாடு கொள்வது. அதனையே தொல்காப்பியம் திருக் குறள் முதலியன 'களவியல்' எனக் கூறும். அக்களவு, ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்தலாம். பால் ஒன்று பட்டால் நட்பாக வும், பால் வேறுபட்டால் காதலாகவும் கொள்ளப்படும். கற்புக்கு முற்பட்டது களவு என்பது தமிழ் நெறி. இறைவனை அடியார்கள் 'உள்ளங் கவர் கள்வன்'. என்பது களவே. அக்களவே யன்பாம்.

களையெடுத்தல் – தீயரை அல்லது வேண்டாரை விலக்கல்

றை

உழவுத் தொழிலின் ஒரு பகுதி களையெடுத்தலாகும். களை கட்டல், களை பறித்தல் என்பனவும் அதுவே. கட்டல், கருவியால் வெட்டல், எடுத்தல் பறித்தல் என்பவை கையால் செயலாற்றல், களையெடுத்தல் வினைக்குப் பிறபிற சொற்களும் உள.

களையெடுத்தல் பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம். அதுபோல் தீயவர்களையும் கேடர்களையும் சுரண்டுபவர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் தேர்ந்தறிந்து தம் கூட்டில் இருந்து விலக்கிவிடும் தேர்ச்சி சிலர்க்கு உண்டு. அவர் செயல் களையெடுத்தல் எனப்படும். களையெடுக்கா விட்டால் சீராகாது என்பது வழக்கம். அடர்ந்து நீண்டுபோன முடிவெட்டுதலைக் களை வெட்டுதல் என்பது இந்நாள் நகர்ப்புற வழக்கில் உண்டு.

கறத்தல் - பறித்தல்

மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை; தெரியாமல் கவர்வது திருட்டு. இது நயமாகப் பல் கால் சிறுகச் சிறுகப் து பறித்துக் கொண்டேயிருப்பது கறத்தலாகும். “என்னை அவன் கறவை மாடாகவைத்துக் கொண்டிருக்கிறான். கறவை நின்று போனால் ஏறிட்டுப் பார்க்க மாட்ட ான் என்பதில் கறவைப் பொருள் தெளிவாம்.