பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம்

1

கறிவேப்பிலை - பயன்கொண்டு தள்ளல்

கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்ட சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும் அதனை எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு உண்பதே வழக்கமாக உள்ளது. அதில் இருந்து “என்னைக் கறிவேப்பிலையாகப் பயன் படுத்திக் கொண்டார்” என்று பழி கூறுவது உண்டாயிற்று. தங்கள் பயனே குறியாகக் கொண்டவர்கள் எப்படி எப்படி யெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்குப வற்றுள் கறிவேப்பிலைக்கும் தனி இடம் உண்டாகி விட்டது. கறுப்பு (கருப்பு) - பேய்

து

கறுப்பு, கருநிறத்தைக் குறியாமல் கரு நிறத்தால் அச் சுறுத்தும் பொய்த்தோற்றத்தைக் குறித்து வருவது. சிலர் இரவில் தனித்துச் சென்றால் நிழலசைவு, இருள், சலசலப்பு இவற்றால் அஞ்சி நடுங்குவர், இத்தகையரைக் கருப்பு அச்சுறுத்திவிட்ட எனக் கூறிக் கருப்போட்டும் முயற்சியில் ஈடுபடுவது நாட்டுப்புறக் காட்சி. அதிலும் பெண்களுக்கே இக் கருப்புக் கோளாறு காட்டு தலும் பேயாடவைத்தலும் உடுக்கடித்தலும் கல் சுமக்க வைத்தலு மாகிய நிகழ்ச்சி இந்நாளிலும் தொடர்கிறது. “ஓராளும் கறுப் புடையும் பேய்" என்றார் பாவேந்தர்.

காக்காக்கடி – பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல்

குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற் காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை அலகால் கொத்தித் தருவது போலத் தருவது கொண்டு இப்பெயர் ஏற்பட்டதாகலாம். காக்காக் கடிக்கு எச்சிலும் இல்லை. தீட்டும் இல்லை என்பது வழக்கம். ‘அணில் கடித்த பழம்’ சுவையானது எனத் தின்பர். ஆனால் எலி, பேரெலி கடித்ததைத் தின்னார். அதுபோல் காக்கை கடித்தது குற்றமற்றது என்னும் கருத்திலும் இவ்வழக்கு வந்திருக்கலாம்.

காடாக்கல் - அழித்தல், கெடுத்தல்

காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழை யின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு அழிவாலே யாம். ஆதலால் காடாக்கல் நல்லதே எனினும், இக்காடு ஆக்கக்