பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

கூச்சல் போட்டு ஊரைக்கூட்டுபவள் ஆகியவளைக் ‘காளி’ என்பது வழக்கு.

சீற்றத்திற்கு வடிவமாகக் காளியைக் கருதுபவர் வழியே வந்த வழக்கம், இவ்வாறு நிலைத்துவிட்டது. காளி என்பதற்குக் கரியவள் என்பதே சொன் முறைப் பொருளாம். காளன் - கரியன்; ஆண்பால்.

காற்றாடல் – வணிகம் நடவாமை

உலாவப் போதல் ‘காற்றாடல்' எனப்படும். வேலையொன் றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக்காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது. ஓய்வு பெற்ற முதியவர் காலார நடப்பதே அக்காற்றாடலாகும்.

ஆனால், சிலர் கடையில் பொழுதெல்லாம் போனாலும் வணிகம் ஒன்றும் நடவாது. பொருள்கள் கடையில் இருந்தும் வாங்குவார் இல்லாமல் வராமல் - காத்துக்கொண்டிருப்பதே கடைக்காரர் பணியாக இருக்கும். அக்கடையைக் காற்றாடுவ தாகக் கூறுவது வழக்கு. ‘கடை காற்றாடுகிறது' என்பர். கடை ஓடாது என்பதற்கு முன்னிலை காற்றாடலாம்.

காற்றுப்பிரிதல் - அடைப்பு அகலல்

வ.

மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை. உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் வை வ வெளிப்படாமை பலப்பல துயர்க்கு இடனாம். இவை பிரிதலைக் காற்றுப் பிரிதல் என்றும், காற்றுப்பரிதல் என்றும் கூறுவர். காற்றுப் பிரிந்தால், அடைப்பு விலகியது என்னும் குறிப்பாம். காற்று மூச்சுக்காற்றைக் குறியாமல் வெளிப்படுத்தவேண்டிய தீக்காற்றைக் குறித்தலால் வழக்கு வழிப்பட்டதாயிற்றாம்.

கிண்டிக்கிழங்கெடுத்தல் - மற்றவை வெளிப்படுத்தல்,

கடுந்துன்புக்காளாக்கல்

கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் - எட்டடி பத்தடி ஆழத்திற்கு மேலும் இருப்பது. அதனைத் தோண் யெடுத்தல் அரும்பாடாம். இவற்றில் இருந்து கிண்டிக்கிழங் கெடுத்தல் வழக்கு உண்டாயது. கிண்டல் என்பது இருக்கு மிடம் காண்டல்; தடவித் தெரிதல். பின்னர் அதன் வழியே அகழ்ந்து கிழங்கெடுத்தல். அதுபோல ஒரு மறைவுச் செய்தியைத் தெரிவதற்குத் துப்புத் துலக்குதலும் அதன் தடம்பற்றி ஆய் தலும் உண்மை கண்டுபிடிக்கும் வழிகளாம் “காவல் நிலையம்