பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

குட்டை உடைத்தல் - கமுக்கத்தை வெளிப்படுத்தல்

59

குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் டித்தல் ஆகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு பொருள் இருப்பின் வெளியே தெரியாது. ஆதலால் ‘குட்டு' என்பது மூடிவைத்தலைக் குறித்துப் பின்னர் மூடிவைக்கப்பட்ட அல்லது கமுக்கமான செய்தியைக் குறிப்ப தாக வளர்ந்தது.

ரு

இருவர் நட்பாக இருந்தகாலையில் உரிமையால் என் னென்னவோ பேசியிருப்பர்; செய்திருப்பர். அவர்களுக்குள் ஒரு பகைமை உண்டாகி விட்டால் பழைய பேச்சு செய்கை ஆகிய வற்றில் உள்ள கேடுகளைச் சுட்டிக் காட்டப்போவதாக அச் சுறுத்தும் முகத்தான் “உன் குட்டை உடைத்து விடுவேன்; ஒழுங் காக இரு என்பர். “உன் குட்டு என்கைக்குள் இருக்கிறது; பார்த்துக் கொள்கிறேன்” என்பதும் உண்டு.

குடலை உருவல் - படாத்துயர்படுத்தல், வசையால் வாட்டல்,

“நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும் குடலை உருவி மாலை போட்டுவிடுவார்" என்பதில் உள்ள குடலை உருவல் அச்செயல் செய்வதைக் குறிப்பதில்லை. குட லை உருவுவது போலக் கொடுமைப்படுத்துவார் என்றும் தன்குடலைத் தானே உருவுமாறு வசை பொழிவர் என்றும் கொள்ள வேண்டிய வழக்காம். குடலை உருவுதல் புலவூணியர் செய்வன. இக்குடலை உருவுதலோ சீற்றமிக்கார் எவரும் செய்வன. குடியர் - மதுக்குடியர்

குடிப்பது எல்லாம் குடியே எனினும், ‘குடி’ குடி' என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக் ‘குடி' என்பது வழக்கத்தில் உள்ளதாம்.

“குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்னும் பழ மொழியில் வரும் குடிகாரன் குடியனாதல் அறிக. குடியிருப்ப வன் என்னும் பொருளை விலக்கிக் குடிப்பவன் என்னும் பொரு ளில் வருதல் அறிக.

குடுமிப்பிடி - கெடுபிடி

“என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்து விட்டான் என்ன செய்வேன்? வில்லாததை விற்றாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்?" என்பது கடன் நெருக்கடிப்பட்டார் சொல்லும்