பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

63

இளக்கமாதல், நெகிழ்தல், வளைதல், தழுவி ஆடுதல் என்பனவெல்லாம் குழைதல் பொருளாக அமைந்தன. “என்ன குழைவு பெரிதாக இருக்கிறது; ஏதோ ஆக வேண்டும் போல் இருக்கிறது” என, குழைபவரைக் கண்டு அதனைப் புரிந்தவர்கள் கூறுவதுண்டு. குழைதல் மெய்யன்பால் நிகழ்வது அன்று. பொய் யான நடிப்பு என்பதால்தான் இகழ்ச்சிக்கு உரியதாயிற்று.

குழையடித்தல் - ஏமாற்றல்.

நோய் நொடி என்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மந்திரிப்பவர்கள் வேப்பங்குழையை எடுத்து வீசித் தண்ணீர் தெளிப்பதுண்டு. நம்பிக்கையால் நோய் நீங்கியதாகச் சொல் வதும் உண்டு. ஆனால் எல்லார்க்கும் அம்மந்திரிப்பு பயன்படுவ தில்லை. அதனால் பயன்படாதவர் அம்மந்திரிப்பை அல்லது குழையடிப்பை ஏமாற்றுதல் எனக் கூறினர். அதிலிருந்து அப் பொருள் தருவதாயிற்று.

பனிக்கட்டி வைத்தல், குளிப்பாட்டல், தலைதடவல் என்பனவெல்லாம் குழையடித்தல் போன்ற ஏமாற்றே எனினும் நுண்ணிய வேறுபாடுள்ளவை என்பதை ஆங்காங்கு அறிக. குளிப்பாட்டல் - வயப்படுத்துதல், புகழ்தல்.

L

நீரால் குளிப்பாட்டல் காணக் கூடியது. குழந்தை, முதியர், நோயர் ஆகியோரைத்தாம் குளிப்பாட்டல் என்பது இல்லாமல் செல்வர்களையும் குளிப்பாட்ட ஆட்கள் உண்டு. இக்குளிப் பாட்டுதல் மகிழ்வளிப்பது! குழந்தைகள் குளிப்பாட்டலை வெறுத்தாலும் தானே குளிக்க விரும்புவது வெளிப்படை. குளிப் பாட்டலிலும் மிகுந்த இன்பம் தருவது புகழ்க் குளிப்பாட்டல். அத்தகையர், இத்தகையவர் என்று வாய் குளிரப்பாராட்டினால் மனங்குளிர்ந்து போகின்றவர்கள் மிகுதி. அம்மிகுதியை அறிந்து கொண்டவர்கள். தங்களுக்கு வேண்டுவதை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புகழ்க் குளிப்பாட்டுதலில் கைதேர்ந்த கலை வல்லராக விளங்குகின்றனர். குளிப்பாட்டல், மனம் கிளு கிளுக்கப் பாராட்டுதலாகப் பொருள் படுவதாயிற்று.

குறுக்கே விழுதல் - தடுத்தல்

ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து ‘என் வாக்கைக் கேட்டுவிட்டுப்போ' என்ப தற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல் வழக்கம். பேருந்து நிறுத்தம், தொடர் நிறுத்தம், சாலை மறிப்பு,