பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் 1

தாழிலக மறிப்பு எல்லாம் இவ்வகைப்படுவனவே. இவ்வழக்கம் குறுக்கே வந்து விழாமலும், ஆள் நேரே கூட வராமலும் கூட எழுத்து வகையாலோ, சொல்வகையாலோ ஏற்படும் குறுக் கீட்டையும் குறுக்கே விழுதலாகக் குறிக்கும் வழக்கு உள்ளது. குறுக்கே விழுந்து தடுக்காதே ; தடுத்தால் பிறகு பார்” என வஞ்சினம் கூறலும் உண்டு.

66

கூகம்

மறைவு

கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப் படுவது இல்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும் ; இரை தேடித் தின்னும் ஆதலால் கூகை பகலில் மறைந்தே இருப்பதை அறிந்தவர்கள், மறைத்து வைக்கும் அல்லது மறை வான செய்தியைக் 'கூகம்' என்றனர். கூகை போல் மறைந்து கிடக்கும் செய்தி என்பது பொருள். சிலர் தங்கள் மனக் கருத்தை வெளியிடவே மாட்டார். அத்தகையவரைக் கூகமானவர் என்பர். நான் சொல்வது கூகமாக இருக்கட்டும் என்று எச்சரிப்ப தும் உண்டு. கூகமாக இருந்து ஊரைக் கெடுத்து விட்டான் என்பது ஒரு சிலர்க்கு ஊரவர் காடை. கூகை மறைவு, கூக மறைவாகியது.

கூட்டிக் கொடுத்தல்-இணைசேர்த்து விடல்

களத்தில் பொலிபோடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் காடுப்பது நடைமுறை. கணவன் மனனவியர் மனத்தாங்கல் கொண்டு பிரிந்துவிட்டால் அவர்கள் வாழ்வில் அக்கறை யுடையவர்கள் அவர்களைக் கூட்டிவைத்தல் உண்டு. ஆனால் இக்கூட்டிக் கொடுத்தல் அவற்றில் வேறுபட்டதும் இN வுடையதுமாம். ஒருவன் பாலுணர்வுக்கு இரையாக ஒருத்தியைத் தம் பயன் கருதிக் கூட்டிக் கொடுத்து இன்பப்படுத்துவது கூட்டிக் கொடுத்தலாகப் பழிக்கப்படும். அத்தொழிலால் பொருள் ஈட்டி அப்பொருளால் பழியை மறைக்கத் தேர்ந்தாரும் உளர்.

L

கூட்டிக் கொண்டு போதல் - உடன்போக்கு.

குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதலுண்டு. கண்டறிந்தவர்கள், கண்டறியாதவர்க்கு வழி காட்டியாக இருந்து சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டு போத லும் உண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக் கொண்டு போதல் என்னும் அளவால் கருதுவது இல்லை.