பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம்

1

அரசாணை; நடுமன்ற ஆணையுமாம். அவ்வாணையே கெடுபிடி எனப்பட்டு, அங்கும் இங்கும் நகராமல் கட்டாயம் உட்பட்டே தீரவேண்டிய நெருக்குதலைக் குறிப்பதாகப் பொதுமக்களால் குறிக்கப்படுவது கெடுபிடியாகும். “அவன் கெடுபிடியைத் தப்ப முடியாது; இந்தக் கெடுபிடி செய்தால் என் செய்வது” என்பவை வழக்குகள்.

கை - ஐந்து

கை என்பது கையென்னும் உறுப்பையோ, ஒழுக்கத் தையோ, கைப்புச் சுவையையோ குறிப்பதை அன்றி ஐந்து என்னும் பொருளில் வழங்குவதும் உண்டு. ஒரு கைவிரல்கள் ஐந்து தானே! கைவிரலைக் கொண்டே மாந்தன் எண்ணிப் பழகினான். அதனை எண்ணிக்கை என்றும் சொன்னான். ஒரு கைவிரல் ஐந்து. இருகை விரலும் சேர பத்து. அதனாலே எண்கள் பதின் மடங்காக வழங்குகின்றன. இனிக்கால் விரலையும் கூட்டி எண்ண இருபது விரல்கள் ஆகின்ற வகையில் இருபதுவரை எண்ணுதலும் உண்டாயிற்று. ஆங்கில எண்களை அறிக.

ஒரு கை

இலை என்றால் ஐந்திலை என்பது பொருள். அடுக்கு, பூட்டு என்பதும் ஐந்தே. அவற்றைக் காண்க. கைகாரன் - திறமையாளன். சூழ்ச்சியாளன், ஏமாற்றாளன்.

அவன் பெரிய கைகாரன்' என்றால் திறமையாளன் என்பது பொருள். ஆனால் அத்திறமை பாராட்டுக்குரிய பொது நலத் திறமையைக் குறியாமல் தன்னலச் சூழ்ச்சியைக் குறிக்கும். அவன் பின்னால் போகாதே; அவன் பெரிய கைகாரன்; உன்னை ஐயோ என்று விட்டுவிடுவான்” என்பதில் அவன் சூழ்ச்சித் திறமும் செயல்விளைவும் விளங்கும்.

66

6

s

கைகாரன் முதல்வேலை நம்பவைத்தல்; அடுத்து நம்பிய வனே சுற்றி வளையவரச் செய்தல்; அதன்பின் வலையுள் படும் மான் போலவும், மீன்போலவும் அவனே வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளவைத்தல் இவையெல்லாம் கைகாரன் வேலை.’ கை என்பது செயல் திறம் என்னும் பொருளது. அதன் எதிர்மறையாவது இது.

கைகொடுத்தல் - உதவுதல்

ஏறமாட்டாதவரைக் கைதந்து மேடேற உதவுதல் உண்டு. வெள்ளத்துள் வீழ்வாரைக் கை கொடுத்துக் கரையேற்றுதல் உண்டு. அக் கைகொடுத்துத் துயர் தீர்க்கும் நடைமுறையில்