பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

பிழைத்துக் கொள்ளலாம் என்பர். கைசுத்தம் வாய் சுத்த மான ஆளா எனப்பலரிடம் கேட்டுப்பார்க்காமல் எடுபிடி வேலை வீ வீட்டு வேலைக்குக் கூட அமர்த்துவது இல்லை. நம்ப விடவேண்டும் அன்றோ! சிலர் செய்கின்ற கருமித்தனத்தால் கையும் வாயும் தூயதாக இருக்கவேண்டும் என எண்ணுபவரும் தன்நிலைமாறிப்போக இடமாவதும் கண்கூடு.

கைந்நீளல் - தாராளம், அடித்தல், திருடல்

கைந்நீட்டல் ‘கொடை' என வழங்கப்படுகிறது. “அவன் கைநீட்ட மாட்டான்" என்பது கொடான் என்னும் குறிப்பின தாம். ‘கைந்நீளம்' என்பது கையின் நெடுமையைக் குறியாமல் நீட்டிக் கொடுக்கும் கொடையைக் குறிப்பதாயிற்று ‘தருகை நீண்ட தயதரன்' என்றார் கம்பரும்.

கைநீட்டல் என்பது அடித்தல் பொருளும் தரும். “இனிக் கண்டபடி கையை நீட்டாதே” என்று கண்டிப்பது உண்டு. தன்னிற் சிறுவனை அடிக்கும் சிறுவனை இவ்வாறு கண்டிப் பதைப் பார்த்தால் கைந்நீட்டலுக்கு அடித்தல் பொருளுண்மை விளங்கும். கைநீளல் திருடுதல் பொருளில் வழங்குவதும் உண்டு. நீட்டி எடுப்பதுதானே திருட்டு.

கைப்பிடித்தல் - மணமுடித்தல்

கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திரு மணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளை யின் கையில் பெண் கையைப் பிடித்துத் தருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மணமேடையை விடுத்துச் செல்லும் கணவன் பின்னே அவன் கையைப் பற்றிக் கொண்டே மனைவியும் செல்லு தல் வழக்கம். "கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்” என்பது ஆண் L ாளார் மொழி. அகத்திட்ட கயை அகலாதே என்பதாகக் ‘கவவுக்கை நெகிழாமல்' வாழ்க வென்னும் வாழ்த்து சிலம்பில் இடம் பெற்றுள்ளது.

கைபோடல் - தழுவுதல்

உரிமையல்லா ஒருத்தியைத் தழுவுதல் கைபோடலாகக் குறிக்கும் வழக்குண்டு. கைபோடுதல் என்பது பாலுறவைச் சுட்டலும் வழக்கே. உரிமையிலா இழிவுப் பொருளில் அன்றி, உரிமையாம் உயர் பொருளில் இது வழங்குமாறு இல்லை. “என் மேல் கைபோட்டுவிட்டாய்; அந்தக் கையை ஒடிக்கவில்லை