பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

69

பிறகு பார்’ என்பது ஒவ்வாக் கைபோடலை ஒழித்துக்கட்ட வெழும் வஞ்சினம். மாடு பிடிக்கும் தரகர் விலைபேசத் துணியைப் போட்டுக் கையை மறைத்துப் பேசுதலும் கை போடலாம்.

கையடித்தல் - உறுதி செய்தல்.

ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் ‘கையடித்துத்’ தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து எடுப்பதே கையடித்தலாம்.

உறுதி (சத்தியம்) சொல்வார் தலையில் கைவைத்தல். துணி மேல் கைவைத்தல், புத்தகத்தின்மேல் கைவைத்தல், தாங்கள் மதிக்கும் பொருள்மேல் கைவைத்தல் எனப் பல வகையால் சொல்வதுண்டு. “பரங்குன்றம் அடி தொட்டேன்” என மலையின் தாழ்வரையைத் தொட்டு உறுதி மொழிந்ததைப் பரிபாடல் சொல்லும்.

மாடுபிடிப்பவர் கையடித்தல் உண்டு. சக்கை வைத்தல், நீர்வார்த்தல் என்பனவும் கையடித்தல் போல்வனவே.

கையாலாகாதவன் - செயலற்றவன்

கையிருக்கும். எடுப்பான் ; கொடுப்பான் ; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறு வான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ தொழிற் சாலைக்கோ பொறுப்பாளனாக இருப்பான். தான் திட்ட வட்டமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் சொல்வார் சொற்படி செய்வான் ; அதிலும் நாளும் பொ பாழுதும் புதுப்புது ஆள்களை நம்பி நிலைப்படாச் செயல் செய்வான். இத்தகையனைக் கையாலாகாதவன் என்பர். தன் மூப்பாகச் செய்ய மாட்டாதவ னே கையாலாகாதவன் என்க. அவனை நம்ப வேண்டா; அவன் கையாலாகாதவன்” என்பது வழக்கு. கை என்பது செயல் என்னும் பொருளதாம்.

கையாள் - குறிப்பறிந்து செய்பவன்.

66

கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந் நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான். அவன் எதிர்காலத்தில் கைகாரனாக விளங்கத்தக்கவ னாவான்.