பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

73

சிலபேர் எப்போதும் ஏதாவது தீமையைக் குடும்பத்துக்கு ஆக்கிக் கொண்டே இருப்பர். அவரைக் கண்டாலே பெற்றவர் உடன் பிறந்தவர் கொண்டவர் கொடுத்தவர் ஆகிய அனைவ ருக்கும் என்ன செய்வாரோ என்னும் அச்சம் உண்டாகும். அத் தகையரைக் கொள்ளி முடிவான்’ என்பர். என்பர். "கொள்ளி முடி வானுக்கு எப்போது போக்காடு வருமோ, நமக்கு நிம்மதி வருமோ" எனப் பெற்றவரையும் மற்றவரையும் படுத்தும் பேய்ப் பிறப்பனே கொள்ளி முடிவானாம்.

கொள்ளையில் போதல் கொள்ளை நோயில் இறத்தல்

கொள்ளை என்பது பெருங்களவை ஊரெல்லாம் திரட்டியடித்துக் கொண்டுபோன பெருங்களவைக் குறிக்கும். கொள்ளை என்பது மிகுதிப் பொருளது. “கொள்ளை விலை” ள “கொள்ளை கொள்ளையாய் விளையும்”. என்பவற்றில் கொள்ளை மிகுதிப் பொருளாதல் அறிக. அது போல், பலரை ஒருங்கே கொல்லும் கொடிய கழிச்சல் நோய் (காலரா) கொள்ளை நோய் எனப்படும். பெரியம்மை நோயும் ஒரு காலத்தில் (Chicken pox) கொள்ளை நோயாக இருந்தது. எலி வழியே பற்றும் ‘பிளேக்’ (Plague) என்பதோ பெருங்கோள்ளை நோய். இந்நோய்கள் மக்களைப் பெரிய அளவில் வாட்டிய நாளில் கொள்ளையில் போதல்' என்னும் வழக்கு எழுந்தது என்க. கொள்ளையில் போவான் என்பது வசையுரை.

கொன்னுதல் - திக்குவாய்

இயல்பாகப் பேசமுடியாமல் திக்கித்திக்கிப் பேசுபவரை நாம் காண்கிறோம். அவர் பேசும்போது அவர்படும் இடரால் நாம் வருந்தவும் செய்கிறோம். அவர் திக்குதல் நகைப்பை உண்டாக்குவதில்லை. அவர் மேல் பரிவையே உண்டாக்குகிறது. அவ்வாறு திக்குதலைக் கொன்னுதல் என்பதிலுள்ள முதற் சொல் 'கொன்' என்பதாம். கொன்னுதல் உறுப்புக்குறையால் ஏற்படுவது. ஒருவகை, அச்சத்தால் ஏற்படுவதும் ஒருவகை அஞ்சும் நிலையில் கொன்னைச் சொல் இடைநிலையாகப் பயன்படுதலைக் குறிப்பார் தொல்காப்பியர் (739), முன்னோர் அதனை அப்பொருளில் வழங்கியுள்ளமை வியப்பாம்.

கோடி மண்வெட்டி - நிரம்பத்தின்னல்

கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண் வெட்டி தேயாதது; கூரானது; நிரம்ப ஆழத்துச்சென்றும் அக