பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

அடையாளப் பொருளாகிவிட்டது. “சங்கு ஊதுமளவும் அவன் குணம் மாறாது" என்றும் “உனக்குச் சங்கு எப்போது ஊது வார்களோ, எங்கள் சங்கடம் தீருமோ” என்றும் தீமையில் ஊறி நிற்பவர்களைப்பற்றி அவர்கள் செய்யும் தீமைக்கு ஆட்பட்ட வர்கள் நினைப்பது இயல்பாயிற்று.

சங்கைப்பிடித்தல் - நெருக்குதல்

சங்கு உயிர்ப்பான இடம்; மூச்சுக் காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்வளிப் போக்கைத் தடுப்பதாம். ‘சங்கை ஒதுக்குதல்’ என்பதும் இதுவே. சங்கை அழுத்திப் பிடித்தாலே மூச்சுத் திணறி விழிபிதுங்கும். எத்தகைய வலியவனையும் சங்கைப் பிடித்துவிட்டால் செயலறவே நேர்ந்து விடும். ஆதலால் ஒருவர் வாங்கிய கடனை நெருக்கும் போதோ, கடன் நெருக்கடி அவருக்கு உண்டாகும்போதோ, “கடன் என்னைச் சங்கைப் பிடிக்கிறது” என்பர். தப்ப முடியாத நெருக்கடி என்பதன் பொருளாம்.

சட்டியெடுத்தல் - இரந்துண்ணல்

L டுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி - மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும் திருவோடு எடுப்பதே வழக்கு. இதுவே வேற்றுமை.

நான் வறியவன் இல்லை என்பதைக் காட்ட “நான் என்ன சட்டியா எடுக்கிறேன்” என்பர்.

-

சதங்கை கட்டல் - ஆடவிடல்

ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம் அவ் வழக்கம், ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலில் இருந்து வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து சொல்ல மாட்டார்; அத் துணிவு அவர்க்கு இல்லை; எண்ணமும் கூட இல்லை. அத் தகையரைச் சிலர் தூண்டிவிட்டும் ஏவிவிட்டும் கிளப்பி விடுவர். அவர் வந்து துணிவுடன் பேசுவர்; சொல்லிக் கொடுத்த சாற்களையெல்லாம் சொல்வர். அத்தகையவர் செயலைக் கண்டு வியப்படைந்தவர். “உனக்குச் சதங்கை கட்டி ஆட விட்டிருக்கிறார்கள்; நீயாகவா ஆடுகிறாய்? உன்னைத் தெரி யாதா எனக்கு “என நகையாடுவர். இதனால் சதங்கை கட்டல் ஆட விடற் பொருளாதல் தெளிவாம்.