பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

77

சரக்கு - சாராயம்

சரக்கு என்பது காய்ந்த பொருளாம். பல சரக்குக் கடையில் உள்ளவை உலர்ந்து காய்ந்த பொருள்களே என்பதை அறிக.

உலர்ந்த பட்டைகளைத் தட்டிப்போட்டு ஊறவைத்து வடித்துக் காய்ச்சுவது சாராயம். ஆதலால் அதனைச் சரக்கு என்பது வழக்காயிற்று. 'பட்டைச் சாராயம்' என்பதும் அதன் மூலப் பொருளை விளக்குவதாம்.

“சரக்கு முறுக்கா? வணிகர் முறுக்கா?” என்பதிலுள்ள ‘சரக்கு' என்னும் பொருளது. “சரக்குப் போட்டிருக்கிறான் போலிருக்கிறது; நடையும் பேச்சும் தெரிகிறதே” என்பதில் சரக்கின் பொருள் விளக்கமாம். அது, கள் சாராயம். சருகுபோடுதல் - வெற்றிலை போடுதல், உவப்புறுதல்

சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும் பொருள்களை வாங்கிக் கொண்டு ‘ஒரு சருகு கொடுங்கள்' என இலவயமாகக் கேட்டுப் பெறுவர். சருகு, வெற்றிலைப் பொருள் தருவதால், சருகு போடுதல்' வெற்றிலை வெற்றிலை போடுதல் என வழக்கில் அமைந்தது. அது பாலுறவுக் குறிப்பாகவும்

சலசலப்பு – அச்சுறுத்தல்

66

இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிய ஆளா நான்?” என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையிடையே வாழ்வது. அதனால் சலசலப்பு அச்சமற்றது அது. இந்தச் சல சலப்புக்கெல்லாம் இந்த நரி அஞ்சுமா?” என்றும் தம்மை நரியாகக் கூறுவர். சலசலப்பு ஒலிக்குறிப்பு. நீரோட்டம், இலை யசைவு, கலம் கருவியொலிகள் ஆயவை சலசலப்பாம். இச்சல சலப்பு, அச்சப் பொருளில் வருதல் வழக்கு வழிப்பட்டதாம். “அந்தச் சலசலப்பை இங்கே வைத்துக்கொள்ளாதே” என்பது எச்சரிப்பாம்.

சாடிக்கு ஏற்றமூடி - கணவனுக்கு ஏற்ற மனைவி

கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தி யமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்றமூடி எனல் வழக்கு. 'செப்பின் புணர்ச்சி' என நட்பியலைக் கூறுவார் திரு