பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

தலையிரண்டை ஒன்றாய் முடித்துப் போட்டு ஒட்டுதல் அல்லது அறுத்தல் ஆகியவை ஒரு காலத்தில் தண்டனை வகைகளுள் ஒன்றாக இருந்து, இவ்வழக்கு உண்டாகியிருக்க வேண்டும். ட்டக்கூத்தர் தந்த தண்டனையாகத் தனிப்பாட்டு ஒன்று கூறும் இதனை.

சிண்டு வைத்தல் - ஏமாறுதல்

கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு, சிறுகுடுமி, “என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார்” என்பதும், “சிண்டு முடிந்து பூச்சுற்றிய வனைப்பார்.” என்பதும், “நான் ஏமாற மாட்டேன்; ஏமாறுகிற ஆளைப்பார்” என்பதாம். சிண்டு முடிந்தவர்கள், கல்வி சூழ்ச்சித் திறம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் எழுந்துள்ள வழக்கு இது. சாணக்கியன் சிண்டு என்ன எளிய சிண்டா? காதில் பூச்சுற்றலும் இத்தகைத்தே, சிண்டு முடிந்தவன் நாடாள்பவன் முடியையே பிடித்து ஆட்டியது இந்திய - தமிழக து வரலராறு.

-

சிண்டைப் பிடித்தல் - செயலற்றுப்போக நெருக்குதல்

சிண்டாவது உச்சிக்குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச் செயலில் இருந்து பலவகையாலும் நெருக் கடியுண்டாக்கி வருந்தச் செய்தலும் சிண்டைப் பிடித்த லாக வழங்கலாயிற்று. "சரியாக சிண்டு அவனிடம் மாட்டிக் கொண்டது; இனித் தப்புவது கடினம்தான்” என்பது நெருங்குதல் அல்லது செயலற்றுப் போகச் செய்தல் வழி வரும் சிண்டாம். சிண்டைப் பிய்த்தல் தன்துயர் நிலை. சிண்டைப் பிடித்தல் பிறரைத் துயருத்தும் நிலை.

சிணுங்குதல் - வேண்டி நிற்றல், மழை தூறுதல்

சிணுங்குதல்

-

என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது, அச்சிணுங்குதல். அதனால், தான் நினைத்ததை நிறைவேற்றிக் காள்வதற்காகச் செய்யப்படுவது. அழுது அடம் பிடித்தல் என்பது வன்மைப்பட்டது. இது இயலாமைப்பட்ட து.

கேட்டது உடனே கிடைக்கத் தடையோ மறுப்போ உண் டாயின் குழந்தைகள் சிணுங்கியும் கண்ணைக் கசக்கியும் இரக் கத்தை உண்டாக்கிப் பெற்றுவிடுவர். அதனால் வேண்டுதற் பொருள் உண்டாயிற்று.