பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

மல் போ, பார்க்கலாம்' என ஏவியவர்கள் இரைவர். இங்குச் சிலுப்புதல் மறுத்தல் பொருளது.

சிவப்புக்கொடி காட்டல் - தடுத்தல்

சிவப்புக்கொடி காட்டினால் தொடர் வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால் சிவப்பு தடைப்படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக்கொடி மாறிப் பச்சைக் கொடி காட்டுவார்களோ தெரியவில்லை. அது வரையிலும் திருமணப் பேச்சை எடுக்க முடியாது எனத் தவிக்கின்றவர் பலர். சிவப்பு தடையாவது, எங்கெங்கும் விளம்பரப் பொருளாகி விட்டது! சிவப்பு முக்கோண மில்லாத ஓரிடம் உண்டா? இரண்டுக்கு மேல் வேண்டா என்பதும் வேண்டாததாய், ஒன்றே போதும் என்றன்றோ விளம்பரப்படுகிறது. ஆயினும் குறைக்க முடிகிறதா ‘நினைப்பவர் மனமே கோயில்' என்பது சிவப்புக்கும் தான். சிவப்பு விளக்குப் பகுதி எனச் சீரழிவுப் பகுதி ஒன்று பெருநகர்களிலெல்லாம் இருந்தது உண்டு. அது நாட்டின்

சீர்கேடு!

சிறை - அழகு

இச் சிறை என்பது சிறைச்சாலைப் பொருளது அன்று சிறுமைப்படுத்தி அடக்கி வைப்பது எல்லாம் சிறையெனப்படும். அவ்வகையில் பழங்கால அரண்மனைகளின் உட்பகுதியாம் அந்தப்புரம் சிறையெனப்பட்டது. வேற்று நாட்டு மகளிரைப் பற்றிக் கொண்டு வந்தும் சிறைப்படுத்தினர். அவர்கள் தங்கல் 'வேளம்' எனப்பட்டது. வேளகம் (விருப்பம்மிக்க இடம்) என்பதே 'வேளம்' ஆயிற்றாம். அந்தப்புரம், வேளகம் ஆகிய வற்றில் இருந்த மகளிர் அழகுமிக்கவராக இருந்தமையால் அழகிய பெண்களைச் ‘சிறை,’ என்னும் வழக்காயிற்று. “அவள் பெரிய சிறை; அவளைத்தேடி ஆளுக்கு ஆள் போட்டி போடு வார்கள்” என்பதில் சிறை ‘அழகிய பெண்' எனப்பொருள் தருதல் அறியலாம். அழகைத் தன்னகத்துச் சிறைப்படுத்திக் கொண்டவள் சிறையெனப்பட்டாள் என்பதுமாம்.

சீண்டுதல் - தொல்லை தருதல்

சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொரு ளிலும் இத்தொடுதல் எரிச்சலையூட்டுகின்ற அல்லது அரு வறுப்பை உண்டாக்குகின்ற தொடுதலாம்.