பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

இதனைக் கழிநெடிலடியான் வந்த செய்யுள் என்னின் அமையாதோ எனின் அமையாது. என்னெனின் அறுசீரின் மிக்கும் கழிநெடிலடி வருமாகலின் வருஞ்சீர் எண்ணிக்கையுடன் ரைத்தல் வேண்டும் என்பது.

அவ்வாறாயின் அறுசீர்க் கழிநெடிலடி என்று அறுதியிட்டு உரைத்தாரால் என் எனின், அறுசீர் அளவான் நிற்பதே சிறப்பு என்றும் அதனின் மிக்கு வரினும் கொள்க என்பதற்கு அன்றே வரும் நூற்பாவை ஓதினார் என்க.

கழிநெடிலடிக்கு மேலும் ஓர் அளவு

23. எண்சீர் எழுசீர் இவையும் கழிநெடிற் கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே.

-யா. கா. 12 மேற்

இந் நூற்பா என்ன கூறிற்றோ வெனின் ‘அறுசீர், கழி நெடிலடி' என்றதற்கு மேலும் இருசீர் உயர்ந்த அளவு கூறிற்று. (இ ள்.) எண்சீர் அளவும், எழுசீர் அளவும் கழிநெடில் அடிக்குப் பொருந்தி வருதல் உண்டு என்று யாப்பியல் அறிந் தோர் கூறுவர் என்றவாறு.

-

இவையும் என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிற்று, அறுசீர் என மேலே நூற்பாவில் அளவு கூறினார் ஆகலின்.

எழுசீர் எண்சீர் என்னாது முறை பிறழக் கூறினார், எண் சீரின் மிக்கும் கழிநெடிலடி வரும் என்பதுரைத்தற்கு. என்னை? இவர்க்கு வழி நூல் செய்தாரும்,

66

“கழிநெடி லடியே கசடறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரன் டீறா

வருவன பிறவும் வகுத்தனர் கொளலே'

-யா. வி. 25.

என்றார் ஆகலின். இனி வழி நூற்கு உரைகண்டாரும் “பதினாறு சீரின் காறும் வருவனவும் உள ; அவற்றையும் கழிநெடிலடியின் பாற்படுத்து வழங்குக என உரைத்துச் சான்று காட்டிப் போந்தார் ஆதல் அறிக.

66

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கணிகொண் டலர்ந்த நறுவேங்கை யோடு

கமழ்கின்ற காந்தள் இதழால்