பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

_

அளவடி 10-14

நன்மணங் கமழும் பன்னெல் ஊர

(10)

அமையேர் மென்றோள் ஆயர் நெடுங்கண் இணையீ ரோதி ஏந்திள வனமுலை

(11)

(12)

நெடிலடி

15-17

கழிநெடி

லடி 18-20

இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் அணிகடை அசைஇய அரியமை சிலம்பின் மணிமருள் வளர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு நனிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை என்பஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே

(13)

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

-யா. வி. 95 மேற்.

-யா. கா. 43 மேற்.

-தொல். பொருள். 352 பேரா மேற்.

இவ்வாசிரியத்துள் நான்கெழுத்து முதல் இருபது எழுத்தளவும் உயர்ந்த பதினேழ் நிலமும் (இடமும்) பெற்றுக் குறளடி முதலாகிய ஐந்தடியும் வந்தமை காண்க. வெண்பா முதலியவை இவ்வடி வகையால் வருதற்கு எடுத்துக்காட்டு யாப்பருங்கல விருத்தியுள் கண்டுகொள்க. (யா. வி. 95).

வஞ்சிப்பாவிற்கு வரும் அடிவகை

25. சிந்தடி குறளடி என்றா இரண்டும்

வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே :

-யா. வி. 26 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வஞ்சிப்பாவிற்கு வரும் அடி இவை எனக் கூறிற்று.

ள்.) சிந்தடி என்றும் குறளடி என்றும் கூறப்பெறும் இருவகை அடிகளும் வஞ்சிப்பாவிற்கு உரிமைப்பட்டன ஆகும் என்றவாறு.

வெண்பா அகவல் கலி வஞ்சி என்று கூறுதல் முறைமை யாகவும் வஞ்சிப்பாவினை முற்கூறினார் எண்ணு முறைமையால் இருசீர் முச்சீர்களாகிய குறள் சிந்தடிகட்கு உரிமையுடைய ஆகலின். ஆயின் குறள் சிந்து எனக் கூறாது சிந்து குறள் என முறை பிறழக் கூறியது என்னோ வெனில் கூறுதும் : சிந்தடி