பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

93

வஞ்சிப்பாவினும், குறளடி வஞ்சிப்பா சிறப்புடைத்து என்று அறிவித்தற்கு என்க. என்னை?

“தலைதடு மாற்றம் தந்துபுணர்ந் துரைத்தல்”

என்பது தந்திர உத்தி ஆகலின். இனி, அமிதசாகரனாரும்,

66

“சிந்தடி குறளடி என்றிரண் டடியான்

வஞ்சி நடக்கும் என்மனார் புலவர்!”

என்று கூறியதும் அறிக.

-யா. வி. 26.

(குறளடி வஞ்சிப்பா)

“பானல்வாய்த் தேன்விரிந்தன

கானல்வாய்க் கழிமணந்தன

ஞாழலொடு நறும்புன்னை

தாழையொடு முருகுயிர்ப்ப

-யா. வி. 26, 90 மேற்.

வண்டல்வாய் நறுநெய்தல்

கண்டலொடு கடலுடுத்துத்

தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராய் இன்னதோர்

கடிமண முன்றிலும் உடைத்தே படுமீன் பரதவர் பட்டினத் தானே”

இது குறளடியான் வந்த வஞ்சிப்பா.

(சிந்தடி வஞ்சிப்பா)

“தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி

என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்

சொன்னலத்தகை பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும்

கலங்கஞர் எய்தி விடுப்பவும்

சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே”

இது சிந்தடியான் வந்த வஞ்சிப்பா.

-யா. வி. 26, 90 மேற்.

குறளடி வஞ்சிப்பாவே சிறப்புடைத்து என்பது ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்துமாம். என்னை?