பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து”

— வெண்பா அளவடியான் வந்தது.

(நேரிசை ஆசிரியப்பா)

தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்

அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும்

தண்ணந் துறைவற் றொடுத்து நம்நலம் கொள்வாம் என்றி தோழி கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே”

அகவற்பா அளவடியான் வந்தது.

95

-நாலடி. 63.

-குறுந்தொகை. 349.

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

“எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவற் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறண்மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணீரோ பெரும காணே மல்லேங் கண்டனங் கடத்திடை ஆணெழில் அண்ணலோ டருஞ்சுரம் முன்னிய மாணிழை மடவரல் தாயிர்நீர் போறீர் ;

இது தரவு.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ;