பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

(வஞ்சித்துறை)

66

"மைசிறந்தன மணிவரை ;

கைசிறந்தன காந்தளும் ;

பொய்சிறந்தனர் காதலர்

மெய்சிறந்திலர் விளங்கிழாய்"

-யா. வி. 23 மேற்.

-யா. கா. 34 மேற்.

குறளடியால் பாவினம் வந்தது.

(வஞ்சி விருத்தம்)

“சோலை ஆர்ந்த சுரத்திடை

காலை யார்கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல உண்கணிவள் வாழுமே”

சிந்தடியால் பாவினம் வந்தது.

(கலி விருத்தம்)

“தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா

மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்

மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே”

அளவடியால் பாவினம் வந்தது.

-யா. வி. 28 மேற்.

-யா. கா. 34 மேற்.

-சூளாமணி 49.

(கலிநிலைத்துறை)

“யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையு மெல்லாம் கரியன்றே”

-நெடிலடியால் பாவினம் வந்தது.

-யா. வி. 28, 88, 94 மேற். -யா. கா. 33 மேற்.