பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

இரண்டும் மூன்றும் நான்கும் இரண்டும் திரண்ட அடியின் சிறுமைக் கெல்லை’

என்று இலக்கணம் கூறி,

(சிந்தடி வஞ்சிப்பா)

“பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்கழல் பரவாதவர் வினைவெல்லார் அதனால்

அறிவன தடியிணை பரவப்

பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே"

103

-யா. வி. 93.

என்று வஞ்சிக்கு எடுத்துக் காட்டுத் தந்தார் மயேச்சுரனார். இச் சிந்தடி வஞ்சிப்பாவினைக் குறளடி வஞ்சியாக்கி,

(குறளடி வஞ்சிப்பா)

66

‘பூந்தண்சினை மலர்மல்கிய

பொழிற்பிண்டி வேந்தன்கழல் பரவாதவர் வினைவெல்லார் அதனால்,

அறிவன தடியிணை பரவப்

பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே” என அமைப்பினும் இழுக்கின்று என்க.

கலிப்பாவின் அடிச்சிறுமை

30. நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே.

-யா.வி. 32 மேற்.

-யா. கா. 14 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறாதொழிந்த கலிப்பாவின் அடிச்சிறுமை கூறிற்று.

இ - ள்.) நான்கு அடிகளினும் அவ்வடிகள் இணை தலால் ஆம் மூன்று தொடைகளினும் குறைந்து கலிப்பா வாராது என்றவாறு.

'நான்காம் அடியிற் றாழ்ந்து வாராது'

என்றோ,