பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

'மூன்றாம் தொடையிற் றாழ்ந்து வாராது’

என்றோ கூறின் அமையுமாக நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் என இரட்டித் துரைக்க வேண்டியது என்னை எனின், எவ்வாற்றானும் கலிப்பா நான்கடியிற் சிறுமையாய் வாராது என்பதை வலியுறுத்தற் கென்க.

தாழிசை, அம்போதரங்கம், சுரிதகம் முதலியவை நான் கடியிற் சிறுமையாய் வருமெனின் அவை உறுப்பாவனவே அன்றிப் பாவன்றாம். ஈண்டுப் பா என்றது உறுப்பின் ஈட்டத்தை உள்ளடக்கியதாம். கலிவிருத்தம், கலித்துறை, கட்டளைக் கலித்துறை ஆகிய எவையும் நான்கடியினும் குறைதல் இல்லை என்பதைச் சான்றோர் செய்யுட்களால் அறிக.

66

(கலி விருத்தம்)

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே”

இக் கலிவிருத்தம் நான்கடியான் வந்தது.

(கலித்துறை)

-அப்பர் தே. 5, 19 : 9.

மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும் தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும் தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும் சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்”

இக் கலித்துறை நான்கடியான் வந்தது.

(கட்டளைக் கலித்துறை)

-யா. வி. 88 மேற்.

“திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டோங்குதெய்வ மருவளர் மாலையோர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே'

-திருக்கோ. 1.