பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

115

இதனுள் ஈரடிகளிலும் முதற்சீர் முதல் எழுத்து விட்டிசைத்து நிற்றலால் விட்டிசை அடிமோனை யாயிற்று. விட்டிசைச் சீர் மோனையும் இதன்கண் உளவாதல் அறிக.

(குறள் வெண்பா)

66

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

-திருக். 267.

இதனுள் அடி முதலெழுத்துடன் பல எழுத்துக்களும் ஒன்றி வருதலால் தலையாகு மோனை யாயிற்று.

"மாவும் புள்ளும் வதிவயின் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப”

என்னும் செய்யுள், முதல் எழுத்து ஒன்றுமே ஒன்றி வருதலால் இடையாகுமோனை யாயிற்று.

“பகலேபல் பூங்கானல் கிள்ளை ஓப்பிபும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ”

என்னும் செய்யுள், முதல் எழுத்துப் பகரமாக அவ்வெழுத்து வாராமல் அதன் வருக்கம் வருதலால் கடையாகு மோனை ஆயிற்று.

66

னி எதுகைக்குச் சொல்லுமாறு :

(குறள் வெண்பா)

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”

இதில் அடியெதுகை வந்தது.

66

(குறள் வெண்பா)

நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு

99

இதில் டகர வருக்க எதுகை வந்தது.

-திருக். 2

-திருக். 791.