பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

(நேரிசை ஆசிரியப்பா)

"ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி செங்குரல் ஏனல் பைங்கிளி இரியச்

சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை நல்லன் என்றும் யாமே

தீயன் என்னுமென் தடமென் றோளே”

-

-யா. வி. 38 மேற்.

இது சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியது. செங்குரல் என்பதில் செம்மை என்னும் சொல்லும் உண்டு. செந்நிறக் கதிர் என்னும் பொருளும் உண்டு. பசுங்கிளி என்பதில் பசுமை என்னும் சொல்லும் உண்டு. பசுமை நிறக் கிளி என்னும் பொருளும் உண்டு. ஓங்குமலை என்பதில் ஓங்குதல் என்னும் சொல்லும் உண்டு. ஓங்கியமலை என்னும் பொருளும் உண்டு. தாழ்ந்திலங் கருவி என்பதில் தாழ்தல் என்னும் சொல்லும் உண்டு. தாழும் அருவி என்னும் பொருளும் உண்டு. ஆதலால் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணின.

(நேரிசை ஆசிரியப்பா)

“இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில் நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

பொன்னின் அன்ன நுண்டா திறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மடமகள்

பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே’

முரண்தொடை

-யா. வி. 38 மேற்.

-யா. கா. 18 மேற்.

இஃது அடிதோறும் முரண்படத் தொடுத்தமையால் அடி முரண். இவை யாப்பருங்கல விருத்தியுடையார் காட்டியவை. என்னாது இரணத்தொடை என்று வேறொரு பெயரால் குறித்த விதப்பினால் ஒருசாரார் கடை ணை முரண், பின்முரண், இடைப்புணர் முரண் எனக் கூறு வனற்றையும் கொள்க. என்னை?

66

கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென இவையும் கூறுப ஒருசா ரோரே

என்றார் ஆகலின்.