பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

தேஎம் பல்பகல் ஒரீஇத்

தாஅம் செய்வதே செய்வ மனாஅ

-யா. வி. 44 மேற்.

என்றும் ஒரூஉ அளபெடை வந்தது.

மேற்கதுவாய்த் தொடையும்

கீழ்க்கதுவாய்த் தொடையும்

40. முடிவதன் முதல்அயல் கதுவாய் கீழ்மேல்.

இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் வருமாறு கூறிற்று. - ள்.) முடியுஞ் சீர்க்கு முதற்சீர் மோனை முதலிய தொடை பெறாமல் வருமாயின் கீழ்க்கதுவாய் என்றும் முடியுஞ் சீர்க்கு முதற்சீரின் அடுத்தசீர் மோனை முதலிய தொடை பெறாமல் வருமாயின் மேற்கதுவாய் என்றும் பெயர் பெறும் என்றவாறு.

முடிவதன் முதல் கதுவாய் கீழ் என்றும் முடிவதன் முதலயல் கதுவாய் மேல் என்றும் இயைத்துப் பொருள் கொள்க. இது நிரல் நிறைப் பொருள்கோள்.

கதுவாய் என்பதை இடைநிலை விளக்காக்கி முதல் கதுவாய் என்றும் முதல் அயல் கதுவாய் என்றும் ஈரிடங்களிலும் கூட்டிக் கொள்க. இதனைத் தாப்பிசைப் பொருள்கோள் என்னாமோ எனின் என்னாம். அஃது இடைநின்ற சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் தருவது ; இஃதன்ன ; தன்றாதல் அறிக.

முதல் ‘அயல்' என்று கூறாமல், முடிவதன் முதல் அயல் என்று தலை தடுமாற்றமாகத் தொடுத்தார்; ஒருசார் ஆசிரியர், முதலயற்சீர் கதுவாய் ஆதல் கீழக்கதுவாய் என்றும், ஈற்றயற்சீர் கதுவாய் ஆதல் மேற்கதுவாய் என்றும் கொள்வார் என்ப துணர்த்துதற்கு.

கதுவாய் ஆவது குறையுறுதல் ; இக்காலத்துக் கொறுவாய் என வழங்கும்.

இவற்றை,

1. யா.வி.47 மேற்.