பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

பஃறொடை வெண்பா

52. தொடைஅடி இத்துணை என்னும் வழக்கம் உடையதை அன்றி உறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே.

175

-யா. வி. 62 மேற்.

-யா. கா. 24 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் பஃறொடை வெண்பாவாவது இஃது என்பது கூறிற்று.

-

ள்.) இத்துணைத் தொடையையும் இத்துணை அடியையும் உடையது என்னும் முறைமை உடையதல்லாமல், வண்பாவுக்கு ஓதப்பெற்ற உறுப்புக்களுள் எவ்வொன்றும் சிதைவுறாமல் நடக்கும் தன்மையது யாது அது பஃறொடை வெண்பா என்னும் பெயர் கொள்ளும் என்றவாறு.

பஃறொடையாவது பல தொடை. இதனை நெடுவெண் பாட்டு என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். செய். 117.

தொடை இத்துணை என்றோ அடி இத்துணை என்றோ கூற அமையுமாக இரண்டையும் கூறியது 'தொடை யொன்றடி யிரண்டாகி’ (48) எனத் தொடங்கி யுரைத்தாராகலின் இவ்வாறு கூறினார் என்க.

இத்துணை என்பதைத் தொடை, அடி இரண்டற்கும்

கூட்டுக.

அறைந்த உறுப்பின் அகறல் இன்றி' என்று மேலே கூறியவர் மீண்டும் 'உறுப்பழி வில்லா நடையது' என்று கூறியது, 'கூறியது கூறலோ' எனின் அற்றன்று ; அவை யெல்லாம் ஈரடி, மூவடி, நாலடியான் வரும் வெண்பாக்கள் என அறுதியிட்டு உரைக்கப் பெற்றன. இப் பஃறொடையோ ‘அடிதொடை இத்துணை என்று வரம்பு கட்டப் பெறாதது ; ஆகலின் வரம்பிலாத் தொடை அடிப் பஃறொடை, உறுப்பழிதலும் உறுமோ என்பார் உளராயின் அவர் ஐயம் அறுத்தற்கு உரைத்தார். ஆகலின் கூறியது கூறல்' என்னும் குற்றத்தின் பாற்படாது என்க.

ப்

இனி, ‘வழக்கம் உடையதை' என்னும் விதப்பினால் அடி தொடை அளவிறந்து வாரா என்பதூஉம் அவ் வளவினை வழக்கறிந்து போற்றுக என்பதூஉம் கொள்க. என்னை?