பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

மூன்று நான்கு என்னாது ஒரு மூன்று ஒரு நான்கு என்றார் அவ்வடி அளவடி என்றற்கு. தனிச்சொல் பெற்று என்னாது தழுவி என்றார், அளவடிக்கு மிக்குத் தனியே வருஞ்சொல் தனிச்சொல் என்று கோடற்கு என்க. யாதானுமொரு தனிச் சொல்லோ என்பார்க்கு, அற்றன்று ஒரே சொல் என்பாராய் அடியடி தோறும்' என்பதை அடுத்துத் தனிச்சொல்லை அடைவு செய்தார் எனக் கொள்க.

66

வெள்ளை' வெண்பாவைக் குறிக்குமோ எனின் குறிக்கும். ‘அந்தத் தனியசை வெள்ளை” (10) என்று இவரும், “வெள்ளைக்கு ரண்டடி” (யா. கா. 14) எனப் பிறரும் கூறியவாற்றான் அறிக.

66

‘நான்கடி யானும் நடைபெற் றடிதொறும்

தான்தனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே

-யா. வி. 68

என்று கூறி மூன்றடியையும் கொண்டார் பிறரும். இவர் வெளிப் படக் கூறினார் என்க.

66

(வெளிவிருத்தம்)

ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே-எந்தைகுன்றம் ; நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே-எந்தைகுன்றம் ; கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே-எந்தைகுன்றம்.

(வெளிவிருத்தம்)

-யா. வி. 68.

“கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்

என்செய்கோயான்

வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்

என்செய்கோயான்

எண்டிசையும் தோகை இசைந்தகவி யேங்கினவால்

என்செய்கோயான்

-யா. கா. 27.

66

(வெளிவிருத்தம்)

'அங்கட் கமலத் தமர்கமல மேயீரும்-நீரேபோலும்

வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரும்-நீரேபோலும் திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும்-நீரேபோலும்

-சி. செ. கோவை 39.