பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

(வெண்டுறை)

“வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன் செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிறபிற நிகழ்வன பின்.”

187

-யா.வி. 67 மேற்.

-யா. கா. 27 மேற்.

இஃது ஐந்தடியாய் ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த வெண்டுறை.

இம் மூன்றும் ஓரொலி வெண்டுறை. ஐந்தடியின் மிக்கு வருவன பெரும்பாலும் வேற்றொலி வெண்டுறை எனக் கொள்க. ஐந்தடியான் வருவன இருதிறமும் ஏற்கும் எனக் கொள்க. (வேற்றொலி வெண்டுறை)

'கல்லாதார் நல்லவையுட் கல்லேபோல்

சென்றிருந்தால் கருமம் யாதாம்? "இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே

ஏமுற்றால் இயைவ தென்னாம்? பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப்

பூண்டாலும் பொலிவ தென்னாம்?

புல்லாதார் பொய்க்கேண்மை

புனைந்துரைத்தால் ஆவதென்னே!

அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?”

யா. வி. 67 மேற்.

இஃது ஐந்தடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை.

(வேற்றொலி வெண்டுறை)

“முழங்கு களியானை மூரிக் கடற்படை

முறித்தார் மன்னர்

வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய

வைவேல் விண்ணன்

செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய

எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி